×
 

குளிர்கால சிறப்பு ஒலிம்பிக் போட்டி... அதிபர் பிரதிநிதிகள் குழுவை வழிநடத்தும் உஷா வேன்ஸ்..!

குளிர்கால சிறப்பு ஒலிம்பிக் போட்டி: அமெரிக்க துணை அதிபரின் மனைவி இந்தியர் உஷா வேன்ஸ், அதிபர் பிரதிநிதிகள் குழுவை வழி நடத்துகிறார்.

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்காவின் துணை அதிபர் மனைவி உஷா வேன்ஸ் 2025 சிறப்பு குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் அதிபர் பிரதிநிதிக் குழுவை வழி நடத்துகிறார். இத்தாலியின் டூரின் நகரில் 2025ம் ஆண்டு சிறப்பு (மாற்றுத்திறனாளிகள்) குளிர்கால ஒலிம்பிக் போட்டி இன்று தொடங்குகிறது. உலகம் முழுவதும் 100 நாடுகளில் இருந்து 1500க்கும் மேற்பட்ட சிறப்பு மாற்றுத்திறனாளி வீரர்கள், தங்களின் குடும்பத்தினர், பயிற்சியாளர், ஆதரவாளர்கள், ரசிகர்களுடன் வந்து இதில் பங்கேற்கிறார்கள்.

ஒலிம்பிக் விளையாட்டில் இருக்கும் ஸ்கேட்டிங், கால்பந்து, ஸ்நோபோர்டிங் விளையாட்டுகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில 100 நாடுகளின் மாற்றுத்திறனாளி வீரர்களுடன், அதிபர் குழுவை வழிநடத்தும் வாய்ப்பை துணை அதிபர் ஜேடி வேன்ஸ் மனைவி உஷா வேன்ஸ் பெற்றுள்ளார்.

அதிபர் பிரதிநிதிகள் குழுவில் இத்தாலிக்கான அமெரிக்கத் தூதர் ஷான் க்ரோவ்லி, மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும தொழிலாளர் துறையின் அதிகாரி ரிலே எம் பேர்னஸ், அதிபர் மற்றும் துணை அதிபர் உதவி இயக்குநர் டிரெண்ட் மைக்கேல் மோஸ், போக்குவரத்துத் துறை அமைச்சர் ராச்செல் காம்போஸ், டஃபி, அதிபர் ட்ரம்ப்பின் மூத்த ஆலோசகர் போரிஸ் எப்ஸ்டெயின் உள்ளிட்டோர் அமெரிக்கா சார்பில் பங்கேற்கிறார்கள். இந்த அதிபர் பிரதிநிதிகள் குழுவை வழிநடத்தும் பெருமையை உஷா வேன்ஸ் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: உலக வங்கி, சர்வதேச பண நிதியத்திலிருந்து அமெரிக்கா விலகினால் என்ன நடக்கும்..? விரிவான அலசல்..!

இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் “ இத்தாலியின் டூரின் நகரில் மார்ச் 7ம் தேதி தொடங்கும் குளிர்கால சிறப்பு ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் யார் பங்கேற்கலாம் என்ற பட்டியலை அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதிபர் பிரதிநிதிகள் குழுவுக்கு துணை அதிபர் மனைவி உஷா வேன்ஸ் தலைமை ஏற்று செல்வார்” எனத் தெரிவித்துள்ளது.

2014ம் ஆண்டு துணை அதிபர் ஜேடி வேன்ஸை உஷா வேன்ஸ் காதலித்து திருமணம் செய்தார். உஷா வேன்ஸ் பூர்வீகம் இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம். இவரின் தாய் தந்தை ஆந்திராவில் பிறந்து அமெரிக்காவில் செட்டிலானவர்கள். 1986ம் ஆண்டு சான்டியாகோ நகரில் பிறந்த உஷா வேன்ஸ், உயர்நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். படிக்கும் காலத்தில் சிறப்பாக செயல்பட்டு சட்டம் பயின்றார். சட்டம் பயில்வதற்கு முன், சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றினார். யேழ் பல்கலைக்கழகும், கேம்பிரிட்ஜ்  பல்கலைக்கழக்தில் உஷா படித்தார். 

யேஷ் சட்டக்கல்லூரியில் உஷா பயிலும்போதுதான் ஜேடி வேன்ஸை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்து இருவரும் காதலித்தனர். 2014ம் ஆண்டு கென்டகி நகரில் இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்தனர். இந்த தம்பதிக்கு இவான், விவேக், மிராபில் என 3 குழந்தைகள் உள்ளன. ஓஹியோ மாகாணத்தின் செனட்டராகவும் உஷா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

இதையும் படிங்க: வீட்டை விட்டு வெளியேறிய 12 வயது சிறுமி.. நைசாக பேசி ரூமிற்கு அழைத்து சென்ற கயவன்.. கூட்டு பாலியல் கொடுமை செய்த கும்பல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share