இந்தியா 200 சதவீதம் வரி போடும்.. அவுங்க தேர்தலுக்கு நிதி கொடுப்பீங்களா.. திரும்பவும் ட்ரம்ப் ஆவேசம்!
இந்திய தேர்தலுக்கு உதவ ஜோ பைடன் அரசு 18 மில்லியன் டாலரை வழங்கியுள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில் பழமைவாத அரசியல் செயல்பாடுகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்றார். மாநாட்டில் அவர் பேசுகையில், "இந்தியத் தேர்தலுக்கு உதவ 18 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டுள்ளன. எதற்காக இது? நாம் நம்முடைய பழைய வாக்குச்சீட்டு முறைக்கு ஏன் செல்லக் கூடாது? பின்பு அவர்களின் தேர்தல்களால் நமக்கு உதவட்டும்.
இந்தியத் தேர்தலுக்காக நாம் பணம் கொடுத்துள்ளோம் அது அவர்களுக்கு தேவையில்லை.
அவர்கள் (இந்தியா) நம்மிடம் அதிக உரிமைகளை எடுத்துக்கொள்கிறார்கள். உலகிலேயே அதிக வரிவிதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நமக்கு அங்கு 200 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. பிறகும் நாம் அவர்களின் தேர்தலுக்கு உதவ வேறு பணம் கொடுக்கிறோம்" என்று ட்ரம்ப் அங்கலாய்த்தார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தால் இந்தியாவில் தேர்தலில் வாக்கு செலுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக நிதி உதவி வழங்கப்பட்டதாக ட்ரம்ப் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் தற்போது ட்ரம்ப் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார், ட்ரம்பின் இந்தக் குற்றச்சாட்டு இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்காவிலிருந்து இன்று நாடு கடத்தப்படும் 119 இந்தியர்கள்… விமானத்தை தரையிறக்க முதல்வர் கடும் எதிர்ப்பு..!
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், "அமெரிக்கா நிதி வரலாற்று ரீதியாகவே இங்கே இருந்து வருகிறது. நல்ல நோக்கத்துக்காக, நல்ல நடவடிக்கைகளுக்காக அமெரிக்க நிதியுதவி இங்கே அனுமதிக்கப்பட்டது. தற்போது அமெரிக்காவில் இருந்து தீய நோக்கங்களுடன் அதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. எனவே நிச்சயமாக அதுகுறித்து மத்திய அரசு ஆராயும்" என்று ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 12 வயது சிறுவர்களுடன் செ***ஸ்.. 35 வயது நல்லாசிரியையின் லீலைகள்.. 30 வருட ஜெயில் தண்டனை