×
 

தவெக தனித்துப் போட்டியிட்டால்... விஜய் எடுத்த அதிர்ச்சி முடிவு… கலக்கத்தில் தவெக நிர்வாகிகள்..!

மாவட்ட செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் தேர்தலில் நிற்பதற்கு பசையான ஆட்களை கண்டுபிடிங்கள்.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு 5 முனை போட்டியை தமிழ்நாடு அரசியல் களம் சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. திமுக தலைமையில் ஒரு கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி, பாஜக தலைமையில் ஒரு கூட்டணி, தவெக தலைமையில் ஒரு கூட்டணி, இதை தவிர நாம் தமிழர் தனித்து களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்த சூழலில், கடந்த ஒரே வாரத்தில் அரசியல் களம் மொத்தமாக மாறியுள்ளது. அதிமுக, பாஜக கூட்டணி நேற்று உறுதியாகிவிட்டது. இதன் காரணமாக, 5 முனை போட்டி 4 முனை போட்டியாக மாறியுள்ளது. 

இதையும் படிங்க: அதிமுகவின் தெளிவு... விஜயின் குழப்பம்... ஸ்டாலினின் பதற்றம்- பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை..!

இந்நிலையில், 2026 தேர்தலில் ஒரு விஷயம் மட்டும் கஷ்டம் என்று வியூக வகுப்பாளர்களிடம் தெளிவாக சொல்லி இருக்கிறார் விஜய் என கூறப்படுகிறது. 2026 தேர்தலில் தனியாக சந்திப்பதா? கூட்டணி அமைத்து சந்திப்பதா? என்பது குறித்து தவெக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

திமுக கூட்டணியும், அதிமுக கூட்டணியும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் தனித்துப் போட்டியிட விஜய்க்கு, ஜான் ஆரோக்கியசாமி தரப்பு ஆலோசனை வழங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. இதைக் கேட்ட விஜய் ஒரு விஷயத்தை திட்டவட்டமாக சொல்லி இருக்கிறார். 2026 ஆம் ஆண்டு தனியாக தவெக தேர்தலை சந்திக்கும் பட்சத்தில் 234 தொகுதிகளுக்கும் என்னால் செலவு செய்ய முடியாது. மாவட்ட செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் தேர்தலில் நிற்பதற்கு பசையான ஆட்களை கண்டுபிடிங்கள்.

234 தொகுதிகளுக்கும் கட்சிக்கு செலவு செய்வது சரியான அணுகுமுறையாக இருக்காது என்று சொல்லி இருக்கிறாராம் விஜய். இதனால் அடுத்த திட்டத்தை ஆராய தொடங்கி இருக்கிறார் அக்கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அதிமுகவுடன் கூட்டணி… பாஜகவுடன் இணைந்து திமுக போடும் வேஷம்… தோலுரித்த விஜய்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share