பாஜகவுக்கு எதிராக திமுக ஸ்டைலில் களமிறங்கிய விஜய்... இன்னும் மூன்றே நாளில் வரப்போகும் விசாரணை..!
நாடு முழுவதும் வக்ஃப் திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகும், பல அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் அதற்கு எதிராகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.
நாடு முழுவதும் வக்ஃப் திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகும், பல அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் அதற்கு எதிராகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இத்தகைய சூழலில் தான் இந்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது ஜாவேத் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து இந்த மசோதாவை எதிர்த்து திமுக சார்பில், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் வக்ஃப் மசோதா தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக்குழு உறுப்பினருமான ஆ. ராசா, மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் எம்.பி மூலம் கடந்த 7ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றினைத் தாக்கல் செய்து இருந்தார்.
அந்த வகையில், வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் . வக்ஃபு சட்டத்திருத்தத்திற்கு எதிராக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. விஜயின் மனுவும் ஏப்ரல் 16 ஆம் தேதி விசாரிக்கப்படலாம். அன்றைய தினம், வக்ஃப் தொடர்பான பிற மனுக்கள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வால் விசாரிக்கப்படும். இந்த அமர்வில் நீதிபதி சஞ்சய் குமார் மற்றும் நீதிபதி கே.வி. விஸ்வநாதன் ஆகியோரும் இடம்பெறுவார்கள்.
இதையும் படிங்க: தவெக தனித்துப் போட்டியிட்டால்... விஜய் எடுத்த அதிர்ச்சி முடிவு… கலக்கத்தில் தவெக நிர்வாகிகள்..!
முன்னதாக மத்திய அரசின் வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டு இருந்த விஜய் ''வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இந்த மசோதா என்பது மதசார்பற்ற இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கைகளையும், அரசியலமைப்பின் மாண்பையும் மீண்டும் ஒருமுறை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது.
அரசியலமைப்பு சட்டத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. வக்ஃபு வாரிய சட்டம் என்பது முஸ்லிம்களின் இறையியல் வாழ்வு மற்றும் சமூக பொருளாதாரத்தோடு பின்னிப் பிணைந்தது இஸ்லாமிய தனியுரிமை சட்டத்தின் முக்கிய அமைப்பு. வக்ஃபு வாரிய சட்டத்தை சிதைப்பது என்பது சிறுபான்மையினருக்கு நம் அரசியலமைப்பும், நம் நாட்டின் தலைவர்களும் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் காற்றில் பறக்க விடுவதன்றி வேறென்ன? இதனால் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்'' என அதில் கூறியிருந்தார்.