கிரைம் சீரியலை" பார்த்து வினோத முயற்சி: 'மிரட்டல் கடித' எழுத்துப் பிழையால் சிக்கிய 'நாடகக் கடத்தல் இளைஞர்'
உத்தரப் பிரதேசத்தில் தன்னைத்தானே கடத்திக் கொண்ட இளைஞர் ஒருவரின், மிரட்டல் கடிதத்தில் எழுத்துப்பிழை இருந்ததால் போலீசாரிடம் வசமாக சிக்கிக்கொண்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தின் பந்தராஹா கிராமத்தைச் சேர்ந்தவர், சஞ்சய் குமார். காண்ட்ராக்டராக தொழில் நடத்தி வந்த அவருக்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது.
அந்தக் கடிதத்தில், அவரது தம்பியான சந்தீப் (வயது 27) என்பவரை தாங்கள் கடத்தியுள்ளதாகவும், அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றால், ரூ.50,000 பணம் தர வேண்டும்.. இல்லை என்றால் சந்தீப்பை கொன்று விடுவோம் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
மேலும், சந்தீப் கயிற்றால் கட்டப்பட்டிருப்பதைப் போன்ற 13-வினாடி வீடியோ ஒன்றும் அவருக்கு அனுப்பப்பட்டு இருந்தது. பின்னர், இந்த மிரட்டல் கடிதம் சஞ்சய் போலீசில் புகார் அளித்தார்.
இதையும் படிங்க: ‘இன்டர்போலு’க்கே இனி ‘டஃப்’ கொடுப்போம்: அமித் ஷா அறிமுகம் செய்த ‘பாரத்போல்’ தளம் பற்றி தெரியுமா..
அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், மிரட்டல் கடிதத்தில், அவரைக் கொன்று விடுவோம் என குறிப்பிடும் ஆங்கில வார்த்தை பிழையோடு எழுதப்பட்டு இருப்பதைக் கவனித்தனர்.±
அதில், டெத் (death) என்ற வார்த்தையை ஒரு எழுத்தை விட்டுவிட்டு (deth) என்று எழுத்துப்பிழையோடு எழுதப்பட்டிருந்ததை போலீசார் கவனித்தனர்.
அதைத்தொடர்ந்து கடிதத்தை எழுதியவர் போதிய கல்வி அறிவு இல்லாதவர் என்றும், அனுபவம் இல்லாத அமெச்சூர் கடத்தல் பேர்வழி என்றும் அவர்கள் தெரிந்து கொண்டனர்.
மேலும் கான்டிராக்டர் குமாருக்கு எதிரிகள் யாரும் இல்லை. அத்துடன் விடுவிப்பதற்கான பணயத்தொகை மிகவும் குறைவாக, அதுவும் 50,000 ரூபாய் மட்டுமே குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.
பின்னர் செல்போன் உதவியுடன் கடத்தப்பட்ட சந்தீபீ ரூபாபூர் என்ற இடத்தில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று சந்தீப்பை கண்டுபிடித்தனர்.
"டெத்" என்ற ஆங்கில வார்த்தையை எழுதச் சொன்னபோது மீண்டும் அதே எழுத்து பிழையோடு அவர் எழுதியிருந்தார். போலீசார் தங்கள் வழக்கமான பாணி விசாரணையை தொடங்கியபோது உண்மையை ஒத்துக் கொண்டார் சந்தீப்.
அவர் மிர்சா பூரில் கரும்பு மையம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். சமீபத்தில் மோட்டார் சைக்கிளில் அவர் சென்ற போது முதியவர் ஒருவர் மீது மோதி விட்டதால் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதனால் நஷ்ட ஈடு வழங்கும் படி அவர்கள் வலியுறுத்தினார்கள்.
இதனால் பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தன்னை கடத்திச் சென்று விட்டதாக கூறி அண்ணனிடமே பணயத் தொகை கேட்கலாம் என்று முடிவு செய்து இந்த கடத்தல் நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்.
பிரபலமான' சி ஐ டி' என்கிற கிரிமினல் சீரியல் ஒன்றைப் பார்த்து, அந்தப் பாணியில் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்ததாக போலீசாரிடம் சந்தீப் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எழுத்துப் பிழையால் தன்னை அறியாமலேயே வாலிபர் சந்தீப் வசமாக சிக்கிக் கொண்டதாக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நீரஜ் குமார் கார்டன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சத்தீஸ்கர் பத்திரிகையாளர் கொலை: இதயத்தை கிழித்த கொடூரம்.. 4 துண்டுகளாக வெட்டப்பட்ட கல்லீரல் ......பகீர் தகவல்கள்