×
 

டிரம்புடன் 13 வருட நட்பு..! இந்தியாவின் ரியல் எஸ்டேட்துறையில் மிகப்பெரிய கூட்டாளி… யார் இந்த கல்பேஷ் மேத்தா..?

இந்தியாவில் டொனால்ட் டிரம்பின் வணிகத்தை மேத்தா கவனித்துக் கொள்கிறார்.

டிரிபெகா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான கல்பேஷ் மேத்தா. டொனால்ட் டிரம்பின் ரியல் எஸ்டேட் நிறுவனமான டிரம்ப் டவரின் பங்குதாரரர்.கல்பேஷ்மேத்தா, டிரம்ப் டவருடன் இணைந்து இந்தியாவில் ரியல் எஸ்டேட் தொழிலைச் செய்து வருகிறார். இருவருக்கும் இடையிலான உறவு சுமார் 13 வருடங்களுக்கும் மேல் தொடர்கிறது. 

டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவின் போது, ​​குறிப்பாக டொனால்ட் டிரம்பின் அழைப்பின் பேரில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு வந்த 2 விருந்தினர்கள் குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது. அந்த இரண்டு பேர் - கல்பேஷ் மேத்தா மற்றும் பங்கஜ் பன்சால். இருவரும் டொனால்ட் டிரம்பிற்கு மிகவும் நெருக்கமானவர்கள், ஏனென்றால் இருவரும் டிரம்பின் இந்தியா வர்த்தகக் கூட்டாளிகள்.

கல்பேஷ் மேத்தா மும்பையைச் சேர்ந்த ஒரு இந்திய தொழிலதிபர். மிகவும்ிரபலமான மேத்தா ரியல் எஸ்டேட் நிறுவனமான டிரிபெகா டெவலப்பர்ஸின் நிறுவனர். இந்தியாவில் டொனால்ட் டிரம்பின் வணிகத்தை மேத்தா கவனித்துக் கொள்கிறார். அவர் இந்திய சந்தையில் டிரம்ப் டவர்ஸின் உரிமம் பெற்ற இந்திய பங்குதாரர். இதற்கு முன்பு, அவர் ஹவுசர், லெஹ்மன் பிரதர்ஸ், தி கார்லைல் குரூப் மற்றும் ஸ்டார்வுட் கேபிடல் குரூப் போன்ற பல  மிகப்பெரிய நிறுவனங்களில் தலைமை பதவிகளை அலங்கரித்துள்ளார். 

இதையும் படிங்க: ஒரேயொரு விருந்து, ரூ.2000 கோடி வசூல்..

டொனால்ட் டிரம்புடனான மேத்தாவின் உறவு 13 வருடங்களாக தொடர்கிறது. புதிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான பார்ட்னர்ஷிப்பில் டிரம்ப் ரியல் எஸ்டேட் பிராண்டை இந்தியாவிற்குக் கொண்டுவருவதில் முக்கியப் பங்காற்றுகிறார் மேத்தா. டிரிபெகா டெவலப்பர்ஸ் இந்தியாவில் டிரம்ப் டவர்ஸ் திட்டங்களுக்கான உரிமம் பெற்ற இந்திய பார்ட்னர்.இந்த நிறுவனம் புனே, குருகிராம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் டிரம்ப் டவர்ஸ் உள்ளிட்ட ஆடம்பர மாளிகைகளை கட்டி வருகிறது. டொனால்ட் டிரம்ப் வாரிசுகளுடனும் கல்பேஷ் மேத்தா நெருங்கிய நட்புடன் உள்ளார். டிரம்ப் குடும்பத்துடனான அவரது நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவில் டிரம்ப் டவர்ஸை அறிமுகப்படுத்தில் டிரிபெகா நிறுவனம்  முன்ன்போடியாக இருந்துள்ளது. 

இதையும் படிங்க: அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார் டொனால்ட் ட்ரம்ப்.. வாஷிங்டனில் கோலாகலம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share