×
 

செழிப்பான சமூகத்திற்கு ஆரோக்கியமே அடித்தளம்.. சுகாதார தினத்தில் பிரதமர் வெளியிட்ட வீடியோ..!

ஒவ்வொரு செழிப்பான சமுதாயத்திற்கும் நல்ல ஆரோக்கியமே அடித்தளம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

1948ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக நல வாழ்வு மன்றத்தின் கூட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார நாள் கொண்டாடுவதாக தீர்மானிக்கப்பட்டது. அதன்படி உலக சுகாதார அமைப்பின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7-ம் தேதி உலக சுகாதார நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இது ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு துறையான உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆண்டு நிறைவையும் குறிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் WHO ஒரு குறிப்பிட்ட பொது சுகாதார பிரச்சனைகள் கவனம் செலுத்துகிறது.

இந்த 2025 ஆம் ஆண்டு உலக சுகாதார தினத்தின் கருப்பொருள் என்னவென்றால் ஆரோக்கியமான ஆரம்பம், நம்பிக்கையான எதிர்காலம், தவிர்க்கக்கூடிய தாய்வழி மற்றும் குழந்தை இறப்புகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் குறிக்கோள். மேலும் தாய்மார்கள் மற்றும் புதிதாக பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் உயிர் வாழ்வை மேம்படுத்துவது தான் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக அமைந்துள்ளது. இந்த பிரச்சாரமானது கர்ப்ப காலத்தில் உயர்தர பராமரிப்பு மற்றும் பெண்கள், குழந்தைகள் இருவருக்கும் பிரசவத்திற்கு பிந்தைய பராமரிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

இதையும் படிங்க: தமிழகத்தைத் தவிர்த்தால் தமிழகத்தில் இடமே இல்லை.. பிரதமர் மோடியை எச்சரிக்கும் முதல்வர் ஸ்டாலின்!

 கடந்த ஐந்து ஆண்டுகளில் உலக சுகாதார தினத்தின் கருப்பொருள்கள் என்னவென்றால் 2024 உலக சுகாதார தினத்தின் கருப்பொருள்... எனது ஆரோக்கியம், எனது உரிமை, 2023 ஆம் ஆண்டு... அனைவருக்கும் ஆரோக்கியம். 2022 ஆம் ஆண்டு...நமது கிரகம், நமது ஆரோக்கியம்., 2021 ஆம் ஆண்டு உலக சுகாதார தினத்தின் கருப்பொருள்...அனைவருக்கும் ஒரு நியாயமான, ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குதல்., 2020ல் செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகளுக்கு ஆதரவு., 2019 ஆம் ஆண்டு உலக சுகாதார தினத்தின் கருப்பொருள்...உலகளாவிய ஆரோக்கியம்,அனைவரும், எங்கும் என்பது தான்.

இந்த நிலையில் இன்று உலக சுகாதார நாள் கொண்டாடப்படுவதை ஒட்டி பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், உலக சுகாதார தினத்தில் ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குவதற்கான உறுதி எடுப்போம் என்றும் சுகாதார பாதுகாப்பில் கவனம் செலுத்தி மக்களின் நல்வாழ்வுக்கான பல்வேறு அம்சங்களில் முதலீடு செய்யப்படும் எனவும் உறுதியளித்தார். மேலும், ஒவ்வொரு செழிப்பான சமுதாயத்திற்கும் நல்ல ஆரோக்கியமே அடித்தளம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

 

இதையும் படிங்க: பிரதமர் வரும்போது ஊட்டிக்கு செல்வதா.? மன்னிப்பு கேளுங்க.. முதல்வர் ஸ்டாலினை வசைபாடும் அண்ணாமலை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share