இது புதுசு! 87 குழந்தைகளுக்கு தந்தையான உலகின் 'நம்பர் ஒன்' 'விந்து கொடையாளி': "எல்லா நாடுகளிலும் குழந்தை வேண்டும்" என்கிறார்!
புதிதாய் பிறந்துள்ள2025 ஆம் ஆண்டில், கோர்டி தனது பங்களிப்பை ஜப்பான், அயர்லாந்து, ஐரோப்பாவின் பிற பகுதிகளுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார்.
சில புதுமையான செய்திகளை "இது புதுசு".. "விசேஷம் இது வித்தியாசம்" என்ற தலைப்பில் பத்திரிகைகள் பிரசுரிப்பதை பார்த்திருப்பீர்கள்.
அது போன்ற செய்திகள், அரிதிலும் அரிதான, அபூர்வமான, கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத வியப்பு அளிக்கும் செய்திகளாக இருக்கும். "எத்தனை நாளைக்கு தான் ஒரே விதமான செய்திகளை அடித்துக்கொண்டே இருப்பது!?".. "வித்தியாசமாக ஏதாவது கிடைக்கிறதா என்று பார்ப்போமே" என கூகுளில் தேடிப் பார்த்தேன்! அப்போது கிடைத்தது தான் இந்த வித்தியாசமான ஒரு செய்தி!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த அந்த இளைஞரின் பெயர், கையில் கோர்டி. 32 வயதான இவர் தற்போதைய சூழ்நிலையில் விந்து தானத்தின் மூலம் உலகின் நம்பர் ஒன் கொடையாளிகளில் புகழ் பெற்று இருக்கிறார். ஆம்.. பல்வேறு நாடுகளில் தனது விந்து தானத்தின் மூலம் இதுவரை 87 குழந்தைகளுக்கு இவர் உயிரியல் தந்தையாவார். இன்னும் 13 குழந்தைகளுக்கு தந்தை ஆகிவிட்டால் சதம் அடித்து விடுவார். "இப்போது கர்ப்பம் தரிக்கலாம்" (the pregnant now) என்ற பெயரில் இணையதளம் ஒன்றை அவர் நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க: கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த குழந்தையின் குடும்பத்துக்கு நிவாரணம்... நேரில் வந்து அசிங்கப்பட்ட அமைச்சர் பொன்முடி..!
இதில் வேடிக்கை என்னவென்றால், இதுவரை தனக்கு விருப்பமான காதலி ஒருவரும் கிடைக்கவில்லை என்று ஆதங்கத்துடன் அவர் சொல்வதுதான். அவருடைய வாழ்நாள்லட்சியம் என்ன தெரியுமா? நூறு குழந்தைகள் மட்டுமல்ல உலகின் அனைத்து நாடுகளிலும் தனக்கு குழந்தை இருக்க வேண்டும் என்பதுதான்! இதற்கு முன்பு உலகில் 100 குழந்தைகளுக்கு தந்தையான நபர்கள் மூன்று பேர் மட்டுமே உள்ள நிலையில், தற்போது அந்த சாதனை பட்டியலில் கைல் கோர்டியும் இணைகிறார்.
தனது இணையதளம் மூலம் இலவசமாக விந்தணு நன்கொடை அளிக்கும் கோர்டி, பெண்களுக்கு குடும்பம் நடத்த உதவுவதில் பெருமை கொள்கிறார். "இது சாத்தியமில்லை என்று நினைத்த பெண்களுக்கு நான் உதவியதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று" என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார். தனக்கு இத்தனை குழந்தைகள் என்று குறிப்பிட்ட இலக்கு எதுவும் இல்லை; பெண்கள் அவரது உதவியை நாடும் வரை தொடர்ந்து நன்கொடை அளிக்க விரும்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
"வருங்கால மனைவி" பற்றிய தனது பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமும் சர்வதேச அளவில் அவர் பிரபலமாகி வருகிறார். இருப்பினும் எந்த ஒரு பெண்ணிடமும் இதுவரை அவர் காதல் வலையில் சிக்கவில்லை என்பதுதான் வினோதம்! அனிகா பிலிப் என்ற இளம் பெண்ணை அவர் காதலித்தார். ஆனால் 8 மாதங்களுக்கு மேல் அவர்களுடைய காதல் நீடிக்கவில்லை. புதிதாய் பிறந்துள்ள2025 ஆம் ஆண்டில், கோர்டி தனது பங்களிப்பை ஜப்பான், அயர்லாந்து மற்றும் ஐரோப்பாவின் பிற பகுதிகளுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார்.
"உலகம் முழுவதும் உள்ள மக்கள் கருத்தரிக்க நான் உதவியுள்ளேன், மேலும் 2026 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு நாட்டிலும் என்னுடைய குழந்தை இருக்கும்." என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார் அவர்.
இதையும் படிங்க: பாலமேடு ஜல்லிக்கட்டில் சாதிய பாகுபாடா? - தமிழரசனுக்கு நடந்தது என்ன? - மதுரை ஆட்சியர் விளக்கம்!