×
 

பாகிஸ்தானின் அடித்தளத்தை அசைக்கும் 11 வயது பலூச் சிறுமி… ராணுவத்தையே துண்டு துண்டாக கிழிக்கும் சோயா..!

11 வயது சிறுமி சோயா.  பலோச் ஆர்வலர் ஜாகீர் பலோச்சின் மகள். ஜாகீர் பலோச் 2015 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் ஹப் நகரத்தில் காணாமல் போனார். அவர் பாதுகாப்புப் படையினரால் கடத்தப்பட்டதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.

பலுசிஸ்தானின், பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சமி தீன் -மெஹ்ராங் பலோச் என பலூச் விடுதலையின் இளம் பெண் போராளிகள் கைது செய்யப்பட்ட பிறகு, பலோச் இயக்கம் சோயா பலோச் வடிவத்தில் வெடித்துக் கிளம்புகிறது. 11 வயது சிறுமி சோயா, பாகிஸ்தான் பிரதமர், ராணுவத் தலைவர் முனீருக்கு எதிராக தொடர்ந்து கடும் குரல் எழுப்பி வருகிறார். சிறுமி சோயா மூலம், பலூச் தலைவர்கள் முழு இயக்கத்திற்கும் ஒரு புதிய உதுதலை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் ராணுவம்,  அரசிற்கு எதிரான சிறுமி சோயாவின் உக்கிரமான பேச்சுக்கள் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. தனது பேச்சில், சிறுமி சோயா பாகிஸ்தான் அரசை ஒரு பயங்கரவாதி என்றும், இராணுவத்தை ஒடுக்கும் நாசக்காரர்கள் என்றும் குறிவைக்கிறார்.

இதையும் படிங்க: பாகிஸ்தான் அரசை விரலைவிட்டு ஆட்டும் 32 வயது பலூச் பெண்: தலைவலியாக மாறிய வீர தீர மஹ்ரங்..!

11 வயது சிறுமி சோயா.  பலோச் ஆர்வலர் ஜாகீர் பலோச்சின் மகள். ஜாகீர் பலோச் 2015 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் ஹப் நகரத்தில் காணாமல் போனார். அவர் பாதுகாப்புப் படையினரால் கடத்தப்பட்டதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். அதன் பிறகு ஜாகீர் இப்போது வரை வீடு திரும்பவில்லை. ஜாஹீருக்கு ஆதரவாக குவெட்டாவில் இருந்து கராச்சி வரை போராட்டங்கள் நடத்தப்பட்டன.

முன்னதாக, ஜாஹீரின் சகோதரி அவருக்காகப் போராடி வந்தார். ஆனால், இப்போது அவரது 11 வயது மகள் சோயா போராட்டத்தை கையில் எடுத்துள்ளார். ஒவ்வொரு போராட்டத்திலும், சிறுமி சோயா, தனது தந்தையை மீட்டுத் தருமாறு கோருகிறார். சமீபத்தில், சிறுமி சோயா மக்களுடன் சேர்ந்து 'எங்களுக்கு நீதி வேண்டும்' என்று கோஷமிடும் வீடியோ வைரலானது.

ஒரு வைரல் வீடியோவில், சோயா பேசுகையில், ''நாங்கள் பயங்கரவாதிகள் என்று அழைக்கப்படுகிறோம். ஆனால், உண்மையான பயங்கரவாதிகள் அதிகாரத்தில் உள்ளனர். நம் மக்கள் வீடுகளில் இருந்து கடத்தப்படுகிறார்கள். அதற்கு யார் பதில் சொல்வார்கள்? சோயா தனது பேச்சில் பெரும்பகுதியை உள்ளூர் பலூச் மொழியில் முழங்குகிறார்.

அத்தோடு, ஆர்ப்பாட்டத்தின் போது, ​​சோயா தனது தந்தை ஜாகீர் பலோச்சின் பதாகைகளையும்  கையில் ஏந்தியுள்ளார். ''நான் படிக்க விரும்பும் வயதில், என் தந்தையைத் தேடிக்கொண்டு இருக்கிறேன்.இது என்ன மாதிரியான நாடு?'' எனக் கேட்டு கலங்கடிக்கிறார்.

ஒருபுறம் பலூசிஸ்தானில், பலூச் விடுதலை இராணுவம் இராணுவத்திற்கு எதிராக ஒரு பெரும் போரை நடத்தி வருகிறது.பலூச் இயக்கத்தின் தலைவர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பலுசிஸ்தானில் அரசியலமைப்பு மீறப்படுவதாக அங்குள்ள தலைவர்கள் கூறுகிறார்கள். அங்குள்ள மக்கள் தொடர்ந்து வீடுகளில் இருந்து கடத்தப்படுகிறார்கள்.

1948 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறிய பலுசிஸ்தானில் சுதந்திரம் கேட்டு நீண்டகாலமாக போராடி வருகிறது. ஆனால், பலுசிஸ்தானுக்கு விடுதலை வழங்க பாகிஸ்தான் விடாப்பிடியாக மறுத்து வருகிறது. பலுசிஸ்தானில் நடந்து வரும் அடக்குமுறைக்காக பாகிஸ்தானை ஐக்கிய நாடுகள் சபையும் கண்டித்துள்ளது.
 

இதையும் படிங்க: #Breaking: பாகிஸ்தானில் அடுத்த கொடூரத் தாக்குதல்: 90 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share