கடந்த அதிமுக ஆட்சி காலத்தின் போது சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் தனது சகோதரியின் மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அப்போதைய வெம்பக்கோட்டை அதிமுகா மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரரான விஜய நல்லதம்பியிடம் பணம் கொடுத்தபோது அவர் மோசடியில் ஈடுபட்டதாக அவர் புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் விஜயநல்ல தம்பியிடம் நடத்திய விசாரணையில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தன்னிடம் பணத்தை பணத்தை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணையானது ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், அவர் மீதான குற்றப்பத்திரிக்கையை ஆன்லைன் மூலமாக மாவட்ட குற்றவியல் காவல் துறையினர் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த குற்றப்பத்திரிக்கை குறித்தான முழுமையான விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எத்தனை பக்கங்கள் கொண்டதாக குற்றப்பத்திரிக்கை உள்ளது, அந்த குற்றப்பத்திரிக்கையில் எது போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட எந்த விஷயமும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

குறிப்பாக ஆன்லைன் மூலமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அந்த விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனாலும் கூட இன்று மாலைக்குள் அது குறித்தான முழுமையான தகவல் தெரிவிக்கப்படும் என்ற ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மிக முக்கியமாக முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு குறித்த அந்த முறைக்கேடு வழக்கில் அவர் மீது சட்ட நடவடிக்கைகளை தொடங்க தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கக்கூடிய நிலையில், இன்று இந்த குற்ற பத்திரிகை என்பது தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராஜேந்திர பாலாஜிக்கு சிக்கல்... ஃபைலை தூசி தட்டிய ஆளுநர்: திமுக அரசு தீவிரம்..!
இதையும் படிங்க: அந்த விஷயத்துல ஸ்டாலினுக்கு சாமர்த்தியம் பத்தல... எள்ளி நகையாடிய ராஜேந்திர பாலாஜி...!