திமுக தலைமையிலான திமுக கூட்டணி அரசு தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இன்னும் ஒரு ஆண்டு எஞ்சியிருக்கிறது. அதற்குள் தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக சட்டமன்ற தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. பூத் கமிட்டி கூட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளார். அதிமுக, பாரதிய ஜனதா கூட்டணி மீண்டும் அமைந்துள்ளது.

தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேபோல் மற்ற கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தைகளை மறைமுகமாக நடத்தி வருகிறது. இதனிடையே அதிமுக பாஜக கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகிறது. அதற்கு காரணம் , எடப்பாடி பழனிச்சாமி தான். அவர் அதிமுக பாஜக கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும் என்றும் தான் தான் முதலமைச்சர் வேட்பாளர் எனவும் தெரிவித்துள்ளார். மறுபுறம் டிடிவி தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை எக்காரணம் கொண்டும் சேர்க்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுகவை மிரட்டி கூட்டணிக்குள் வரவைத்துள்ளனர்.. பாஜக மீது செல்வப்பெருந்தகை பகீர் குற்றச்சாட்டு!!

இதனால் செய்வதறியாது பாஜக குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இதுஒருபுறம் இருக்க மறுபுறம் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற ஒன்றை தொடங்கியுள்ளார். மேலும் புதிய கட்சியை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்காக எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை தனது ஆதரவாளர் மூலம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.

அதற்கான ஒப்புகையும் வழங்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாஜக கூட்டணி கிடைக்காவிட்டாகவிட்டால் தனது கட்சியின் பெயரை அறிவித்துவிட்டு மூன்றாவது கூட்டணியை உருவாக்க ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. அந்த வகையில் விஜய், சீமான் ஆகியோரிடம் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாகவும் வரும் நாட்களில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பாஜகவுடன் கூட்டணி.. அதிருப்தியில் விலகிய அதிமுக நிர்வாகி..!