அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் வால்பரைசோ பகுதியை சேர்ந்தவர் ஜெனிபர் லீ வில்சன் (வயது 48). அவரது வளர்ப்பு மகன் டகோடா லெவி ஸ்டீவன்ஸ் (வயது 10). கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி டகோடா ஸ்வீவன்ஸ் பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் விளையாட சென்றுள்ளான். வெகுநேரம் ஆகியும் டகோடா திரும்ப வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவனது தாய் ஜெனிபர் லீ வில்சன், வெளியில் சென்று தேடி உள்ளார். சிறுவன் பக்கத்தி வீட்டில்விளையாடியது தெரிந்தது. சிறுவனை வீட்டிற்கு வா என தாய் ஜெனிபர் லீ வில்சன் அழைத்துள்ளார்.

ஆனாலும் சிறுவன் விளையாடுவதில் உள்ள ஆர்வத்தில் வீட்டிற்கு வர மறுத்துள்ளான். தாய் ஜெனிபர் லீ வில்சன், சிறுவனை உருட்டி, மிரட்டி வம்படியாக வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீட்டிற்கு வந்த பிறகும் சிறுவன் விளையாட செல்ல வேண்டும் என அடம்பிடித்ததாக கூறப்படுகிறது.
ஜெனிபரின் சற்று கவனம் திசை திரும்பியதும் மீண்டும் சிறுவன் வெளியில் ஓடி சென்றுள்ளான். அவனை வெளியில் சென்று வீட்டிற்கு இழுத்து வந்த ஜெனிபர் லீ வில்சன், இனி வெளியில் செல்லக்கூடாது என மிரட்டி உள்ளார். சிறுவன் விடாமல் அடம் பிடித்து அழுததாக கூறப்படுகிறது. இதனால் சிறுவன் பிடியில் இருந்து நழுவி வெளியில் சென்று விடாமல் இருக்க, சிறுவனை கீழே தள்ளி, ஜெனிபர் அவன் மீது ஏறி அமர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: இதுக்குலாமா கல்யாணத்த நிறுத்துவாங்க.. மணமகன், தாயாருடன் சேர்ந்து 'கனவு இல்ல'த்தை வாங்கியதால் மணப்பெண் ஆத்திரம்..!

இதில் சிறுவன் மயங்கியதாக கூறப்படுகிறது. உடனே ஜெனிபர் அவசர உதவி எண்ணுக்கு அழைத்து பேசி உள்ளார். போலீசாரிடம் பேசிய ஜெனிபர், எனது 10 வயது மகன், டகோடா சுயநினைவின்றி கிடக்கிறான் என கூறியுள்ளார். போலீசார் உடனே விரைந்து சென்று பார்த்தபோது, டகோடாவின் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் காயங்கள் காணப்பட்டன. அவனை சுயநினைவுக்கு கொண்டு வர போலீசார் முயற்சித்தனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர், மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டான் என டாக்டர்கள் கூறினர்.

இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பேசிய ஜெனிபர், டகோடா வீட்டை விட்டு ஓடி விட்டான். தேடி பார்த்தபோது பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்தது தெரிய வந்தது. அவனை வீட்டுக்கு அழைத்து வந்த பின்பும், வீட்டை விட்டு போகிறேன் என அடம் பிடித்தான். தரையில் அழுது புரண்டான்.
இதனால் அவனை வெளியில் விடக்கூடாது என சிறுவன் மீது ஏறி அமர்ந்தேன் என கூறி உள்ளார். அதாவது அந்த 10 வயது சிறுவனின் மீது 154 கிலோ எடை கொண்ட ஜெனிபர் 5 நிமிடங்கள் வரை அமர்ந்து இருக்கிறார். ஜெனிபர் ஏறி அமர்ந்ததும் சிறிது நேரத்தில் சிறுவன் அசையாமல் கிடந்துள்ளான். அவன் நடிக்கிறான் என நினைத்ததாக ஜெனிபர் தெரிவித்தார்.

இதன்பின்னர் அவனை பரிசோதித்தபோது, சுயநினைவின்றி சென்றதுபோல் தெரிந்ததாகவும், இதனால், முதலுதவி சிகிச்சையை அளித்ததாகவும் ஜெனிபர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதுபற்றி கோர்ட்டில் நடந்த விசாரணையில், சிறுவன் வெளியே ஓடி விட கூடாது என்பதற்காகவே சிறுவன் மீது அமர்ந்ததற்கான காரணங்களாக அவர் கூறியுள்ளார். பிரேத பரிசோதனையில் சிறுவன் டகோடா மூச்சு திணறி உயிரிழந்தது உறுதியானது.

அவனுக்கு கடுமையான உள்ளுறுப்பு காயங்கள் ஏற்பட்டு இருந்தன. நடந்த சம்பவங்களுக்கு சாட்சியான பக்கத்து வீட்டுக்கார பெண்மணி கூறும்போது, சிறுவன் பாதிப்புக்கு உள்ளாவதற்கு முன் என்னுடைய வீட்டுக்கு வந்து, என்னை தத்தெடுத்து கொள்ளுங்கள். ஏனெனில் பெற்றோர் முகத்தில் குத்தி விட்டனர் என கூறினான் என்றார். எனினும், சிறுவனின் முகத்தில் காயங்கள் எதனையும் நான் பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார். இதன்பின்னர் ஜெனிபர் சிறுவனை அழைத்து செல்வதற்காக உடனடியாக வந்து விட்டார் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: புது ரூட்டெடுத்த சீனா.. இந்தியாவுக்கு வளர்ச்சி..? அமெரிக்காவுக்கு சிக்கல்!!