அமெரிக்காவில் 28 வயது பெண் ஒருவர் தனது வருங்கால கணவர், தாங்கள் கனவு இல்லமாக கருதிய வீட்டை தனது தாயாருடன் சேர்ந்து ரகசியமாக வாங்கியதை அறிந்ததும் திருமணத்தை ரத்து செய்து விட்டார். இது குறித்து சமூக வலைத் தளத்தில் அவர் தனது கருத்துக்களை விரிவாக பகிர்ந்து இருக்கிறார்.

தானும் தனது வருங்கால கணவர் (வயது 30) 5 ஆண்டுகளாக ஒன்றாக இருப்பதாகவும், இந்த ஆண்டு (2025) இலையுதிர் காலத்தில் திருமணத்துக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்ததாகவும் தெரிவித்தார். இருவரும் பணத்தை சேமித்து இருவருக்கும் விருப்பமான ஒரு வீடு வாங்க வேண்டும் என்று பெரிய திட்டம் தங்களிடம் இருந்ததாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: புது ரூட்டெடுத்த சீனா.. இந்தியாவுக்கு வளர்ச்சி..? அமெரிக்காவுக்கு சிக்கல்!!
திருமண காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. வருங்காலத்தில் பெற்றுக் கொள்ள வேண்டிய குழந்தைகள் நிதி நிலைமை மற்றும் ஒன்றாக வீடு வாங்குவது குறித்த திட்டம் பற்றி பல ஆண்டுகளாக நாங்கள் பேசி வந்தோம்.

இருப்பினும் தனது வருங்கால கணவர் அவருடைய தாயுடன் சேர்ந்து ஏற்கனவே ஒரு வீட்டை எனக்குத் தெரியாமல் ரகசியமாக வாங்கியுள்ளார். அது பற்றி எனக்கு தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். அவர் ஏற்கனவே ஒரு வீட்டை வாங்கி இருக்கிறார். ஆனால் என்னுடன் இல்லை. அவருடைய அம்மாவுடன் இணைந்து.. இது பற்றி என்னிடம் அவர் ஒருமுறை கூட சொன்னது இல்லை. எனவே அவர் தனது எதிர்காலத்தை ஒன்றாக திட்டமிடுவதற்கு பதிலாக தனது தாயாருடன் நிதி ரீதியாக ஒப்படைக்கப்பட்டு விட்டார். அவர் இனி அங்கு முழு நேரமாக வாழ போகிறார்.
என்னை பார்த்து 'நீங்களும் இந்த வீட்டில் குடி ஏறலாம் நிச்சயமாக' என்று அவர் கூறினார். மேலும் வருங்கால கணவர் தனக்கு பின்னால் ஒரு வீட்டை வாங்குவதற்கு மற்றொரு வியப்பான நியாயத்தையும் அவர் சொன்னார். நான் சேமிக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டதால்தான் தனது தாயருடன் சேர்ந்து வீடு வாங்கியதை அவர் ஒப்புக்கொண்டார்.

மேலும் அவருடைய அம்மா அவருக்கு ஏதாவது ஒன்றை சொந்தமாக்குவதற்கு வேகமாக வழி காட்டினார் என்றும் அது குறித்து தெளிவாக அவர் விளக்கினார்.
இதனால் கோபமாகவும் அதிர்ச்சியாகவும் உணர்ந்த நான், அதைப்பற்றி எவ்வளவு அதிகமாக யோசித்தேனோ அவ்வளவு அதிகமாக இது சாதாரணமானது என்று நினைக்கும் ஒருவரை நான் திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதை உணர்ந்தேன். அதனால் நான் திருமணத்தை ரத்து செய்வது என்ற முடிவுக்கு வந்ததாக கூறியுள்ளார்.
மேலும் தனது வருங்கால கணவரின் குடும்பத்தினர் தனது முடிவை புரிந்து கொள்ளவில்லை என்றும் அவர்கள் நாடகமாடுவதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதையும் படிங்க: என்னது சம்மதிச்சிட்டிங்களா..! அமெரிக்க வரிக்குறைப்பு குறித்து பிரதமர் மோடி விளக்க வேண்டும்.. காங்கிரஸ் வலியுறுத்தல்..!