15 கோடி மோசடி தொடர்பாக தமிழக தொழில் மேம்பாட்டு கழகத்தின் வருவாய் அலுவலர் கரூர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சூரிய பிரகாஷ் என்பவர் தமிழக தொழில் மேம்பாட்டு கழகத்தின் வருவாய் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கரூர் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்துள்ளார்.

அப்போது தொழிலதிபர் நல்லமுத்துவிடம் வெளி மாநிலங்களில் டெக்ஸ்டைல் தொடர்பான ஆர்டரை பெற்று தருவதாக கூறி சுமார் 15 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக 2014 ஆம் ஆண்டு கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் சூரிய பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க: தொட்டா நீ கெட்ட.. வாட்ஸ் அப்பில் வரும் வீடியோ கால்.. சைபர் கிரைம் மோசடியில் சிக்கிய எம்.எல்.ஏ..!

இந்த நிலையில், இந்த வழக்கு இழுத்து அடித்து வந்தது. விசாரணை தீவிர படுத்திய போலீசார் சென்னையில் வைத்து நேற்று அதிகாரி சூரிய பிரகாஷை கரூர் குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் சென்னையில் கைது செய்யப்பட்ட சூரிய பிரகாஷை கரூர் போலீசார், கரூருக்கு அழைத்துச் சென்று மோசடி தொடர்பாக விசாரணை தீவிர படுத்தியுள்ளதாக வெளி வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரயில்வே மருத்துவமனையை தரம் குறைக்கும் முடிவு.. டி.ஆர்.இ.யூ தொழிற்சங்கத்தினர் தொடர் போராட்டம்!