கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பெணி செய்யும் ஊழியர்களில் டார்கெட் முடிக்காத ஊழியர்களை சங்கிலியால் கட்டி வைத்து நாய்கள் போல் மண்டியிட வைத்து கொடூர தண்டனை கொடுக்கப்பட்டதாக அந்நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் விசாரணை நடத்த மாநில தொழிலாளர் துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதுவரைக்கும் இந்த விவகாரம் தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை. இருப்பினும் இந்தச் சம்பவம் தொடர்பாக , விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீசார் தரப்பில் தெரிவித்தார்.

அந்த வீடியோவில் ஊழியர்களை சங்கிலியால் கட்டிவைத்து, நாய்களைப் போல் மண்டியிட்டு நடக்கவும், தரையில் இருந்து நாணயங்களை நக்கவும் வைத்து கொடுமைப்படுத்திய உள்ளனர். இந்த வீடியோ கேரளா மட்டும் அல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொச்சியின் கலூரில் செயல்படும் ஒரு தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் இந்த செயல் அரங்கேறியுள்ளது. ஆனால் வீடியோவில் துன்புறுத்தப்படுவதாக காட்டப்படும் நபர், நிறுவனத்தில் பணி துன்புறுத்தல் எதுவும் இல்லை என்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விபரீதத்தில் முடிந்த ட்ரீட்மென்ட்..! நாக்கை துளைத்த டாக்டர் மீது போலீசில் புகார்..!

நான் இன்னும் அந்த நிறுவனத்தில்தான் வேலை செய்து வருகிறேன். இந்தக் காட்சிகள் சில மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டவை. அப்போது அந்த நிறுவனத்தின் மேலாளராகப் பணிபுரிந்த ஒருவரால் வலுக்கட்டாயமாக எடுக்கப்பட்டவை. பின்னர் நிர்வாகத்தால் அவர் பணியில் விட்டு விலகும் படி கேட்கப்பட்டார். அதன்பிறகு அந்த நபரும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்று விட்டார். இப்போது அவர் இந்த வீடியோக்களை பயன்படுத்தி நிறுவனத்தின் உரிமையாளரை அசிங்கப்படுத்த முயற்சி செய்கிறார் என அந்த வீடியோவில் இருக்கும் நபர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக கேரள கல்வித்துறை மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார். மேலும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் குளத்தூர் ஜெய்சிங் அளித்த புகாரின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்தது. இதற்கிடையில், கேரள மாநில இளைஞர் ஆணையமும் தலையிட்டு, இந்த சம்பவம் தொடர்பாக தாமாகவே வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட காவல்துறைத் தலைவருக்கு உத்தரவிட்டது.

இதற்கிடையில் தண்டனையாக ஊழியர்கள் தங்கள் ஆடைகளை தாங்களே கழற்ற கட்டாயப்படுத்தப்படும் மற்றொரு வீடியோவும் வீடியோவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோக்கள் அனைத்தும் நான்கு மாதங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டது எனவும் அந்த ஊழியர் தெரிவித்துள்ளார். வேலைக்கு சென்ற இடத்தில் டார்கெட் முடிக்காத இளைஞர்களை உடையை அவிழ்க்க செய்து அரை நிர்வாணமாக நிற்க வைப்பதும், நாய் போல் நடத்தியதும், சங்கிலியால் கட்டி கொடுமை படுத்தியதும் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஐயப்ப பக்தர்கள் கேரளாவில் இறந்தால் ரூ.5 லட்சம் இன்சூரன்ஸ்.. திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவிப்பு..!