கோவை பீளமெடு அருகே நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் படித்து வந்தவர் அனுபிரியா. அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்த இவர் மீது பணம் திருடியதாக பேராசிரியர்கள் குற்றம்சாட்டியதாக தெரிகிறது. இதனை அனு மறுத்த நிலையிலும் தொடர்ந்து குற்றம் சாட்டிதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த மாணவி 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வீண்பழி சுமத்தியதால் தங்கள் மகள் உயிரிழந்து விட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர். இதற்கு கல்லூரி நிர்வாகம் தான் காரணம் என்று கூறிய அவர்கள் பணம் திருடியதற்கான ஆதாரம் உள்ளதா என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: வகுப்பறைக்கு வெளியே தேர்வு எழுதிய மாணவி.. நடவடிக்கை எடுக்கப்படும்.. அமைச்சர் உறுதி..!

ஆதாரம் இருப்பதாக கூறும் கல்லூரி நிர்வாகம் அதனை காட்ட மறுப்பதாகவும் குற்றம்சாட்டினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஊட்டியின் வரப்பிரசாதம்..! உதகை அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!