ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பெயர் சென்னையில் இருந்து மதுரைக்கு சுவாமி தரிசனத்திற்காக சென்றுள்ளனர். அப்போது அவர்கள் அழகர் கோயில் செல்வதற்காக தத்தனேரி பகுதியில் உள்ள வாடகைக்கார் நிறுவனம் மூலமாக கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் மதுரை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மதியழகன் என்பவர் வாடகை காரை ஓட்டி சென்றுள்ளார். அப்போது அழகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பி போது, மதுரையின் நத்தம் பறக்கும் பாலத்தின் மீது கார் அதிவேகமாகச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் செங்கல் ஏற்றிச் சென்ற சரக்கு லாரி ஒன்று சாலையில் பழுதாகி நின்றுள்ளது. அதனை கவனிக்காத கார் ஓட்டுநர் லாரி மீது அதி வேகமாக மோதியதில் கார் சுக்கு நூறாக நொறுங்கியது. இதில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட ஆறு பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஆதீனத்தின் 24-ஆவது குரு மகாசன்னிதானம் - 'ஒரு கிராமம் ஒரு அரச மரம்' திட்டம் அமல்
முன்னதாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கார் ஓட்டுனரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தொப்பியில் 804 என்று எழுதிய பாக். வீரர்... ஒரு மில்லியன் அபராதம்; காரணம் என்ன?