முதல்நாளான இன்றே லட்சக்கணக்கிலான பக்தர்கள் வந்து கங்கை, யமுனை, சரஸ்வதி நிதியில் “சனி ஸ்நானம்” அல்லது பவுஸ் பவுர்ணமி எனும் புனித நீராடினர். இன்று(ஜனவரி13) தொடங்கியுள்ள மகா கும்பமேளா பிப்ரவரி 26ம் தேதிவரை நடக்கிறது. இந்த கும்பமேளாவில் மொத்தம் 45 கோடி மக்கள் வந்து புனித நீராடுவர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மகா கும்பமேளாவுக்காக பிரயாக்ராஜ் நகரில் 40 ஏக்கர் நிலம் தயார் செய்யப்பட்டுள்ளது. 1.50 லட்சம் குடில்கள் அமைக்கப்பட்டு பக்தர்கள் தங்க வசதி செய்யப்பட்டுள்ளது. 3 ஆயிரம் சமையல் கூடங்கள் உருவாக்கப்பட்டு, பக்தர்களுக்கு தினசரி அன்னதானம் நடக்கிறது.
மகா கும்பமேளாவுக்காக 4.50 லட்சம் புதிய மின் இணைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன, 98 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. பாதுகாப்புக்காக 40 ஆயிரம் போலீஸார், தன்னார்வலர்கள், துணை ராணுவப்படையினர் அமைக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர கண்காணிப்பு கேமிரா, ட்ரோன்கள், ஏஐ பயன்படுத்தி கண்காணிப்பு செய்யும் கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கும்பமேளாவுக்குள் வரும் பக்தர்கள், அவர்கள் வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிரமான பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டபின்புதான் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். பிரயாக்ராஜ் நகரைச் சுற்றியுள்ள கிராமங்கள், நகரங்களை இணைக்கும் பகுதிகள் அனைத்திலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மகா கும்பமேளாவுக்காக தற்காலிகமாக 55 தற்காலிக காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, 45 ஆயிரம் போலீஸார் கும்பமேளா முடியும் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்து மதத்தில் உள்ள 13 அகாராக்களும் பல்வேறு இடங்களில் இருந்து வந்து இந்த கும்பமேளாவில் பங்கேற்கிறார்கள். இன்று பவுர்ணமி, நாளை மகர சங்கிராந்தி பண்டிகை என்பதால் லட்சக்கணக்கில் பக்தர்கள் பிரயாக்ராஜ் நகரில் புனித நீராட குவிவார்கள். இதை சமாளிக்கும் பொருட்டு, பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும், பல்வேறு வசதிகள், போக்குவரத்து மாற்றங்களை போலீஸார், நகர நிர்வாகம் செய்துள்ளது.
இதையும் படிங்க: ‘கும்பமேளாவை போர்க்களமாக மாற்றுவோம்’: காலிஸ்தான் தீவிரவாதி மத்திய அரசுக்கு எச்சரிக்கை

கும்பமேளாவுக்கு வரும் வாகனங்களை நிறுத்த தனியாக வாகன நிறுத்தம் உருவாக்கப்பட்டுள்ளது, போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பல இடங்களில் ஒரு வழிப்பாதை முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
சங்கம் மேளாவுக்கு வரும் பக்தர்கள் ஜவஹர்லால் நேரு மார்க் வழியாக வந்து, திரிவேணி மார்க் வழியாக வெளியேற வேண்டும் என பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பக்தர்களின் பாதுகாப்புக்காக தேசிய பேரிடர் மீட்டுப்படையினர், உத்தரப்பிரதேசத்தின் நீர் வழி காவல்துறை ஆகியவை போதுமான அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறிப்பிட்ட நட்சத்திரத்தில் இந்த கும்பமேளா நடக்கிறது இதன் சிறப்பாகும். முதல்நாளில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து நிதிகளில் புனித நீராடினர். பக்தர்கள் வசதிக்காக உத்தரப்பிரதேச அரசு, நகர நிர்வாகம், போலீஸார் செய்த ஏற்பாடுகள் தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ‘சனாதனத்தின் மீது நம்பிக்கையுள்ள எந்த முஸ்லிமும் கும்பமேளாவுக்கு வரலாம்’: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அழைப்பு...