உத்தரபிரதேச மாநிலம் பிரியாக் ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள். இதுவரை 60 கோடி பேர் அதாவது நமது நாட்டின் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் திருவேணி சங்கமத்தில் புனித நீராடி இருக்கிறார்கள்.
அது பற்றிய செய்திகள் ஏராளமான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வந்தபடி உள்ளன. அதே நேரத்தில் அங்கு பெண்கள் குளிப்பதை மறைந்திருந்து படம் எடுத்து வெளியிடுவது போன்ற வக்கிர செயல்கள் அரங்கேறுவதும் வாடிக்கையாகிவிட்டது.

அது மட்டுமல்ல அங்கு ஏற்படும் விபத்து தீ விபத்து குறித்தும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வந்திருப்பது இப்போது தெரியவந்துள்ளது. உதாரணமாக வங்காளதேச நாட்டில் நடைபெற்ற ரயில் விபத்து படங்கள் கும்பமேளா விபத்து படங்களாக குறிப்பு கொடுத்து படங்கள் வழியாக இருக்கின்றன. பெண்கள் குளிக்கும் ஆபாச வீடியோக்களை விற்பனை செய்யும் 'டார்க் வெப்' மோசடியை உத்தரபிரதேசம் மற்றும் குஜராத் போலீசார் துப்பு துலக்கி உள்ளனர்.
இதையும் படிங்க: 55 கோடி பேர் புனித நீராடல் என்பது சுத்தப் பொய்..! புதிய சர்ச்சையை கிளப்பும் பிரசாந்த் கிஷோர்..!
இப்படி தவறான வீடியோக்களை பரப்பி மக்களை திசை திருப்பிய 34 சமூக ஊடகங்கள் மீது மகா கும்ப நகர் போலீசார் வழக்கு ( முதல் தகவல் அறிக்கை ) பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண்கள் குளிப்பது உடை மாற்றுவது போன்ற ஆபாச வீடியோக்களை விற்றது தொடர்பாக குஜராத் போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச போலீசார் 13 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். சர்வதேச நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக இதுபோன்ற வீடியோக்கள் டார்க் நெட்டில் விற்பனைக்கு வழங்கி வந்திருக்கிறார்கள். அவர்களின் தொடர்புகள் அட்லாண்டா, அமெரிக்கா மற்றும் ருமேனியாவுடன் இருந்ததும் கண்டறியப்பட்டது.
ஏற்கனவே மத்திய உள் துறை அமைச்சகம் 17 வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடக தங்களை முடக்கி உள்ளது. அவைகளுக்கு இந்த வெளிப்படையான வீடியோக்கள் விற்பனைக்கு வழங்கப்பட்டு இருந்தன. நட நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக புதிய பெயர்களில் பல சேனல்களும் திறக்கப்பட்டுள்ளன.
அவர்களில் சிலர் ரஷ்யா திவேதி தேசி ரஷ்யா வீடியோஸ் youtube, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் கேர்ள்ஸ் லைவ் என்ற பெயரில் கணக்குகளை திறந்து மகா கும்பமேளாவில் பெண்கள் குளித்து உடை மாற்றும் வீடியோக்களை விற்பனை செய்ததும் தெரிய வந்துள்ளது. இந்த வீடியோக்கள் 2000 முதல் 3000 ரூபாய் வரை விற்கப்பட்டிருந்தன.

அதைத் தொடர்ந்து கும்பமேளாவில் குளிக்கும் பகுதிகளில் வீடியோக்கள் மற்றும் படங்களை எடுக்க உத்தரபிரதேச அரசு தடை விதித்துள்ளது. இது போன்ற கோடிக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் நேரத்தில் சில நோயுற்ற மனம் படைத்தவர்கள் பக்தர்களோடு பக்தர்களாக சேர்ந்து இது போன்ற வீடியோக்களை எடுத்திருக்கிறார்கள்.
பிப்ரவரி 12 முதல் 18ஆம் தேதி வரை இந்தியாவில் திறந்த வெளி குளியல் என்ற தேடல் வார்த்தை பிரபலம் அடைய தொடங்கியது. அப்போதே உஷாரான காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தொடங்கி விட்டனர். உத்தரப் பிரதேச காவல்துறையால் அடையாளம் காணப்பட்ட 17 சமூக ஊடக கணக்குகளில் 3 பேஸ்புக் கணக்குகள் இரண்டு இன்ஸ்டாகிராத பக்கங்கள் ஒரு டெலிகிராம் சேனல் மற்றும் 12 youtube சேனல்கள் இருந்தன சில வழக்குகளில் குற்றவாளிகள் ஸ்பை கேம்களை பயன்படுத்தினர்.
குஜராத்தில் ஒரு பிரபல மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்களிடம் டாக்டர்கள் நடத்தும் பரிசோதனை காட்சிகள் கூட சமீபத்தில் வீடியோக்களாக வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தியது நினைவு இருக்கலாம்.
இதையும் படிங்க: அண்ணாமலை, ஆளுநர் ரவி, ஜே.பி நாட்டா திடீர் சந்திப்பு..! ப்ரயாக்ராஜில் திடீர் ஆலோசனையால் பரபரப்பு..!