தம்பியை பணய கைதியாக கடத்தி வைத்துக் கொண்டு, அவனுடைய கண் எதிரே, இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்தப் பெண்ணின் முன்னாள் காதலன், அவருடைய 5 நண்பர்களுடன் சேர்ந்து இந்த வெறிச் செயலில் ஈடுபட்டு இருக்கிறார்.
மராட்டிய மாநிலம் பிவாண்டி பகுதியில் இந்த கொடூரம் நடந்துள்ளது. பிவாண்டியில் சாந்தி நகர் பகுதியை சேர்ந்த அந்த22 வயது பெண், வாலிபர் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். காதலனும் அதே பகுதியை சேர்ந்தவர் தான். கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் நட்பு தொடர்ந்தது.

இந்த நிலையில், நான்கு மாதங்களுக்கு முன்பு அந்தப் பெண் காதலனை "பிரேக் அப்" செய்துவிட்டு, மற்றொரு வாலிபருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டார். இதனால் முன்னாள் காதலன் காதலியை பழி வாங்க நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார்.
இதையும் படிங்க: அமாவாசை...பேசுறது நீதானா ? லேசா எடுத்துக்காதீங்க என்னை..! பாஜகவை கடுமையாக எச்சரிக்கும் ஷிண்டே..!
அவர்கள் திட்டப்படி, அந்தப் பெண்ணின் தம்பியை பணய கைதியாக கடத்தி வைத்துக் கொண்டு, அவர் மூலம் இந்த கூட்டு பாலியல் பலாத்காரத்தை நடத்தியுள்ளனர். நிகழ்ச்சி நாள் அன்று பெண்ணின் தம்பியை முன்னாள் காதலனும் அவருடைய நண்பர்கள் ஐந்து பேரும் சேர்ந்து இரவில் கடத்திச் சென்று விட்டனர்.
பிறகு அந்த சிறுவன் மூலமாக அக்காவுக்கு போன் செய்ய வைத்திருக்கிறார்கள். பலமுறை போனில் அழைப்பு விடுத்தும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்ததால் அந்தப் பெண் எடுக்கவில்லை. நள்ளிரவு ஒரு மணி அளவில் அவர் விழித்த போது தனது தம்பியிடம் இருந்து 15 "மிஸ்ட் கால்"கள் வந்திருந்தது பார்த்து அதிர்ந்தார்.

உடனே அந்த போன் நம்பருக்குஅவர் தொடர்பு கொண்டு பேசிய போது கடத்தல்காரர்கள் மிரட்டி சொல்லியபடி தனக்கு உடல் நலம் இல்லாமல் இருப்பதாகவும், குறிப்பிட்ட ஒரு இடத்தை சொல்லி அங்கு உடனே வர வேண்டும் என்றும் சிறுவன் கூறி இருக்கிறான்.
உடனே அந்தப் பெண் பதறி துடித்தபடி ஒரு ரிக்சாவில் அந்த இடத்திற்கு விரைந்திருக்கிறார். அங்கு சென்று பார்த்த போது அந்த பெண்ணின் முன்னாள் காதலனையும் அவனுடைய நண்பர்களையும் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர்கள் ஆறு பேரும் சேர்ந்து இளம்பெண்ணுடன் வந்த ரிக்ஷாக்காரையும் தம்பியையும் அடித்து உதைத்தனர்.
பின்னர் அவர்கள் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக அதே ரிச்சாவில் அமர வைத்து ஒரு பள்ளிக்கு பின்னால் உள்ள புதர் அருகே மறைவான இடத்தில் அழைத்துச் சென்று அவர்களில் நான்கு பேர் பெண்ணிடம் கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

பிறகு மீண்டும் மற்றொரு இடத்திற்கு இழுத்துச் சென்று ஒரு 'பிக்கப் வேனி'ல் மீண்டும் பலாத்காரம் செய்து உள்ளனர். காதலன் உள்பட ஆறு பேரும் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள்.
இது குறித்து சாந்தி நகர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் காதலன் உட்பட நான்கு பேர் மீது பாலியல் பலாத்காரம் வழக்கும் அவர்களுக்கு உதவியதாக இரண்டு பேர் மீது மற்ற பிரிவுகளிலும் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடினார்கள். அவர்களின் ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. மற்றவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
இதையும் படிங்க: தீரன் படத்தை மிஞ்சும் கொள்ளை சம்பவம்..! சென்னையில் கைவரிசை காட்டிய மகாராஷ்டிரா கொள்ளையர்கள்..!