மதிமுகவின் முதன்மைச் செயலாளர் பதவியை துரை வைகோ ராஜினாமா செய்வதாக அறிவித்த நிலையில், மல்லை சத்யா தான் காரணம் என வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். அதற்கேற்றார் போல, மல்லை சத்யாவின் பேச்சுக்கு துரை வைகோவும் பதிலடி கொடுத்து பேசி இருந்தார். துரை வைகோ – மல்லை சத்யா விவகாரம் மதிமுக நிர்வாகக்குழு கூட்டத்தில் சூடுபிடித்துள்ள நிலையில், தன்னை கட்சி பொறுப்பிலிருந்து நீக்கி விடுங்கள் என மல்லை சத்யா பேசியுள்ளார்.

துரை வைகோ அரசியலுக்கு வர வேண்டும் என்று முதலில் கூறியவன் நான்தான் என்று பேசிய அவர், வேண்டுமென்றால் என்னை பதவியை விட்டு நீக்கி விடுங்கள் என கூறியுள்ளார். நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி மதிமுகவிலிருந்து என்னை நீக்கி விடுங்கள் என மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா கூறியுள்ள நிலையில், கடைசிவரை வைகோவின் தொண்டனாக இருந்து விட்டுப் போகிறேன் என்றார். நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவெடுப்பதற்கு முன்பாகவே மல்லை சத்யா இப்படி பேசி இருப்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் கூட்டத்தில் கலந்துக்கொண்ட 40 மாவட்ட நிர்வாகிகளும் துரை வைகோவிற்கு ஆதரவாக பேசி இருப்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: மேடையில் துரை வைகோ.. இறுதி சீட்டில் மல்லை சத்யா.. நிர்வாகக்குழு கூட்டத்தில் நடப்பது என்ன?
இதையும் படிங்க: பதவிப்பறிப்பா? என்ன முடிவுனாலும் ஏத்துக்குறேன்! வைகோவிடம் பணிந்த மல்லை சத்யா..!