தமிழ்நாட்டில் மருத்துவம், பொறியியல் போன்ற கல்வி தமிழ் மொழியில் இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். தமிழில் கற்பிக்க முன்வர வேண்டும், ஏன் தமிழில் கற்பிக்க முடியவில்லை என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில், சென்னை கிண்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் வழியில் மருத்துவக் கல்வி இல்லை என்ற அமித்ஷாவின் குற்றம் சாட்டுக்கு பதிலடி கொடுத்து பேசினார்.

தமிழகத்தின் மருத்துவ பாடத் திட்டத்திற்கான புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் . இதனை மருத்துவ மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள் என்றும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்தார். இனி மருத்துவ மாணவர்கள் ஆங்கிலத்தில் மருத்துவம் மட்டுமில்லாமல் தமிழ் மொழியிலும் கற்கும் வாய்ப்பு உருவாகி உள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கூட்டணி.. ஆட்சி.. சர்ச்சை! அனுமதியின்றி பேட்டிக் கொடுக்காதீங்க.. அதிமுகவினருக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்..!

அண்ணா பல்கலை கழகங்கள் போன்ற இடங்களில் ஏற்கெனவே, பொறியியல் படிப்பு தமிழில் கற்பிக்கப்படுவதாகவும், அதேபோல மருத்துவமும் தமிழில் கற்பிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் ஏற்கனவே தமிழக அரசு முயற்சிகளை முன்னெடுத்து வந்ததாகவும், அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் தமிழக அரசு வெளியிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக ஆட்சி குறித்து பொய் கருத்தை பரப்புகிறார் சேகர்பாபு..! சட்டசபையில் அதிமுக அமளி..!