மனிதர்கள் செவ்வாய் கிரகத்துக்கு செல்ல முடியும் என்பதனை சுனிதா வில்லியம்ஸ் நிரூபித்துள்ளதாக முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவரும், இஸ்ரோ விஞ்ஞானியமான மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். அப்போது பள்ளியில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிய அவர், முன்னாள் பணியாற்றிய ஆசிரியர்கள்
தற்போது பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பொன்னாடை போற்றி கௌரவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சுனிதா வில்லியம் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பியுள்ளார். உடனடியாக சகஜ நிலைக்கு திரும்ப முடியாது . இங்குள்ள ஈர்ப்பு விசைக்கு தகுந்த போல இதயம் முதல் அனைத்து உறுப்புகளும் பழுவை தாங்கக்கூடிய சக்தி தேவை அவர்களது உடல்நிலையில் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணித்து அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். ஒரு வார காலத்திற்குள் நல்ல நிலைக்கு திரும்பி குடும்பத்துடன், இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றார்.

இதையும் படிங்க: டால்பின்களின் வரவேற்புடன் பூமிக்கு வெற்றிகரமாகத் திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்..!
சுனிதா வில்லியம்ஸுக்கு ஏற்கனவே இரண்டு முறை விண்வெளி சென்ற அனுபவம் உள்ளது. இங்குள்ள ஈர்ப்பு விசை விண்வெளியில் இல்லை. உடல்நிலை அந்த சூழலில் பழக வேண்டிய அவசியம் உள்ளது. விண்வெளியில் சிறப்பாக இருந்தார்கள். விண்வெளியில் ஒவ்வொரு நாளையும் எப்படி கழித்தார்கள் திரும்பி வந்தால் எப்படி இருப்பார்கள் என்பதை ஒரு பாடம் போலவே உணர்வார்கள். இதுதான் உலக அளவில் பார்க்கப்பட வேண்டியதாக உள்ளது.

9 நாட்கள் திரும்பி வர வேண்டிய சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்கள் தங்கி தலைமை விண்வெளி வீரராக இருந்தார். விண்வெளியில் நடந்து சென்றது பல சாதனைகளை செய்துள்ளார். செவ்வாய் கிரகத்திற்கு செல்ல வேண்டியவர் 9 மாதங்கள் விண்வெளியில் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது கிட்டத்தட்ட அந்தப் பரிசோதனையை நிரூபித்து விட்டார்.

நாளை மனிதர்கள் ஆண்,பெண் என இருபாலரும் விண்வெளியில் செவ்வாய் கிரகத்திற்கு கூட செல்ல முடியும் என்பதை நிரூபித்துள்ளார். சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் நிலவுக்கு மீண்டும் மனிதர்கள் அனுப்ப முடியுமா என்பதை அதை பரிசோதனை செய்வதற்கான சென்றார்கள் பத்து நாட்களில் வர முடியவில்லை 9 மாதம் ஆகிவிட்டது செவ்வாய்க்கு கூட போக முடியும் என்பதையும் மனித உடல் தாங்கும் என்பதை நிரூபித்துள்ளார்கள். 10 நாட்களுக்குப் பிறகு அது நிரூபணம் ஆகும் என்று நம்புவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்.. பத்திரமாக தரையிறங்கியது டிராகன்.. சாதித்த நாசா..!