மதிமுகவின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்தது மட்டுமல்லாமல் கட்சிக்கு ஒருவர் அவப்பெயர் ஏற்படுத்தி வருவதாகவும் சூசகமாக கூறினார். துரை வைகோ விலகலை தொலைக்காட்சிகளில் பார்த்துதான் தாம் தெரிந்து கொண்டதாகவும் துரை வைகோவின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாகவும் மதிமுகவின் பொதுச்செயலாளரான வைகோ தெரிவித்தார்.

இதையடுத்து சென்னை அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் வைகோவை துரை வைகோ சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், முதன்மைச் செயலாளார் பொறுப்பில் இருந்து துரை வைகோவின் விலகலை ஏற்க மதிமுக தலைமை மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை நடைபெறும் நிர்வாக குழு கூட்டத்தில் ஆலோசித்து சுமூக முடிவை எட்ட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வைகோ மற்றும் துரை வைகோ உடனான சந்திப்பிற்கு பிறகு மதிமுக பொருளாளர் செந்தில் அதிபன் செய்தியாளார்களை சந்தித்தாற்ற். துரை வைகோ விலகினால் ஏற்படும் தாக்கம்,விளைவுகள் குறித்து நாளை நடைபெறும் நிர்வாக குழுவில் ஆலோசிக்கப்பட்டு முடிவை நாளை வைகோ அறிவிப்பார் என்றும் தேவையான அறிவுரைகளை வைகோ வழங்கியுள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: கட்சிப் பொறுப்பை உதறிய துரை வைகோ..! தந்தை வைகோவுடன் முக்கிய ஆலோசனை..!
இதையும் படிங்க: கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ..! யார் அந்த ஒருவர்..? அதிர்ச்சியில் தொண்டர்கள்..!