பாலஸ்தீனத்திற்கான தூதர் மெக்சிகோவில் செயல்பட அந்நாட்டு அரசு கடந்த ஆண்டு அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் பின்னர் பல்வேறு சிக்கல்கள் காரணமாக தூதர் நியமிக்கப்படாமல் இருந்தார். இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி பாலஸ்தீனத்திலிருந்து தங்கள் நாட்டுக்கான புதிய தூதராக நாடியா ரஷீத் நியமிக்கப்பட்டார். இதற்கு மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெயின்பம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மெக்சிகோவின் அதிபர் கிளாடியா ஷெயின்பம் யூதராக இருந்தாலும், பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தும் மனித உரிமை மீறலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அதனை தொடர்ந்து தற்போது பாலஸ்தீன தூதரை அவர் அங்கீகரித்துள்ளார். மெக்ஷிகோவின் இந்த செயல் டிரம்பை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு காரணம், பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் காசாவை விலை கொடுத்து வாங்கி அங்கு கேளிக்கை பூங்காக்காளை உருவாக்கி சுற்றுலா மையமாக மாற்றப்போவதாக சில நாட்களுக்கு முன்னர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: இந்தியா வரியை குறைத்தாலும் நான் குறைக்க மாட்டேன்... உச்சக்கட்ட பிடிவாதத்தில் டிரம்ப்!!

டிரம்பின் இந்த கருத்துக்கு இஸ்ரேல் அதிபரும் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அமெரிக்காவின் பக்கத்து நாடான மெக்சிகோ பாலஸ்தீன தூதரை அங்கீகரித்திருப்பது டிரம்ப்பை அதிருப்தி அடைய செய்துள்ளது. ஆனால், மெக்சிகோ – பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு 1975 ஆம் ஆண்டு முதல் தொடங்கியுள்ளது. மெக்சிகோ காலம் காலமாக பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டைதான் எடுத்துள்ளது.

அதற்கு எடுத்துக்காட்டாக கடந்த ஆண்டு ஒரு சம்பவம் நிகழ்ந்தது. இஸ்ரேலுக்கு எதிரான போர் குற்றத்தில் சர்வதேச நீதிமன்றத்தில் அந்நாட்டுக்கு எதிராக மெக்சிகோ தன்னை நிலை நிறுத்திக்கொண்டது. மெக்சிகோ-பாலஸ்தீன உறவில் இந்த சம்பவம் மிக முக்கிய மைல் கல்லாக இருந்தது. இருப்பினும் வரி விஷயத்தில் மெக்சிகோவை கட்டுப்படுத்தி வழிக்கு கொண்டுவர வேண்டும் என்று டிரம்ப் கணக்கு போட்டிருந்தார். ஆனாலும் அதை மீறி பாலஸ்தீனத்துடன் மெக்சிகோ நெருக்கம் காட்டியுள்ளது.
இதையும் படிங்க: நாடு கடத்தும் வழக்கு... இந்திய வழக்கறிஞரை நம்பியிருக்கும் டிரம்ப்... யார் இவர்?