சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை மேற்கொண்டார். 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் கண்காணிப்பு அலுவலர்கள், ஆய்வு அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டமாக இது நடைபெற்றது.

12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் 3-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடைபெற உள்ளது. அதேபோன்று 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 5-ந் தேதி தொடங்கி 27 வரை நடைபெறும். பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 28-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 12-ம் வகுப்புக்கு மே 9-ந் தேதியும், 10 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான முடிவுகள் மே 19-ந் தேதியும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அப்படி என்னதாங்க இருக்கு புதிய வருமானவரி மசோதாவில்.. .

இந்த ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.21 லட்சம் பேரும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.23 லட்சம் பேரும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9.13 லட்சம் பேரும் எழுத உள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், பொதுத்தேர்வு பணியில் நாள்தோறும் 40 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக குறிப்பிட்டார். மேலும் பார்வைத்திறன் குறைபாடு உடைய மாணவர்களின் கோரிக்கையை ஏற்று 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை அத்தகைய மாணவர்கள் கணினி வழியில் எழுத முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதையும் படிங்க: டெல்லியில் பிரம்மாண்ட ஆர்.எஸ்.எஸ் அலுவலகம்...!ரூ.150 கோடியில் 13 மாடி கட்டிடம்