தொகுதி மறு வரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் கூட்டமானது இன்றைய தினம் சென்னையில் இந்த ஐடிசி கிராண்ட் சோலா நட்சத்திர ஓட்டலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக 7 மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் 3 மாநில முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதனிடையே தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் மற்றும் கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரைக் கண்டித்து பாஜகவினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கி மூத்த தலைவர் எச்.ராஜா வரை தங்களது வீடுகளுக்கு முன்பு கருப்புக்கொடி ஏற்றிவைத்தும், கையில் கருப்புக்கொடி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: அறநிலையத்துறை இணை ஆணையர்கள் இடமாற்றம்.. தமிழ்நாடு அரசு நடவடிக்கை..!

இதுகுறித்து இன்று திருவள்ளூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், அது பீஸ் போன பல்ப். ஏதாவது ஒன்னு பண்ணிக்கிட்டே இருக்காங்க, அதை பத்தி பேசிட்டே இருக்கீங்க அடுத்து கேளுங்க என சுருக்கமான பதிலளித்தார்.

நேற்று அமித் ஷா நாடாளுமன்றத்தில் திமுக தனது ஊழலை மறைக்கவே மொழி கொள்கையை எதிர்ப்பதாக தெரிவித்தது குறித்த கேள்விக்கு, நீங்கள் தான் தொடர்ந்து ஈடி, ஐடி, சிபிஅயை எல்லாம் கூட்டணி கட்சி மாதிரி வச்சிக்கிட்டு, முழு அளவில் தமிழகத்தை சோதித்து பார்க்கிறீர்கள். இதுவரையிலும் என்ன ஊழலை கண்டுபிடிச்சீங்க . என்ன ஊழலை வெளிக்கொண்டு வந்தீங்க. அமலாக்கத்துறை கிட்ட நீங்க என்ன சொல்றீங்களோ அது அறிக்கையாக வெளிவருது. அதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தோம், நேற்று நீதிமன்றமே அதனைக் கண்டித்துள்ளது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருச்செந்தூரை தொடர்ந்து ராமேஸ்வரம்.. கூட்ட நெரிசலில் சிக்கி வடமாநில பக்தர் பலி.. கோயில்களில் தொடரும் சோகம்..!