முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மக்கள் முதல்வரின் மனிதநேய விழா கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கொளத்தூர் கிழக்கு பகுதிக்கு உட்பட்ட சுப்பிரமணி தோட்டம் மற்றும் திரு.வி.க.நகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு திமுக மாவட்ட செயலாளருமான சேகர்பாபு கலந்து கொண்டார். ஏழை எளிய பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் சேகர்பாபு கூறியதாவது, பாஜக குறித்து அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த பலர் விமர்சித்தது குறித்து ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. திடீர் அழைப்பு டெல்லிக்கு எதற்கு என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் சேகர்பாபு, உள்துறை அமைச்சர் சார்பில் எந்த விதமான பதிவுகளும் இடம் பெறவில்லை, அதேபோல நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்த நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதற்காக சந்தித்தோம் என்ற விளக்கத்தை கூறவில்லை.
இதையும் படிங்க: அவசர, அவசரமாக டெல்லி கிளம்பிய அண்ணாமலை... எடப்பாடி என்ன சொன்னார் தெரியுமா?

ஆனால் ஒரே ஒரு விளக்கத்தை மட்டும் உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தலைமையில் தான் தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு ஆட்சி அமைக்கப்படும் என்றார். விமான நிலையத்தில் வைத்து எதிர்க்கட்சித் தலைவரை கேட்கின்ற பொழுது மழுப்பலான பதிலை சொன்னாரே தவிர உறுதியாக அவருடைய தலைமையில் தான் தேர்தல், அவருடைய தலைமையின் கீழ் தான் ஆட்சி அமைக்கப்படும் என்று உறுதிப்பட கூறவில்லை.

ஆகவே டெல்லி மிட்டா மிராசுகள் நிறைந்த பகுதி என்பதை காட்டுகின்ற வகையில் நேற்றைக்கு எடப்பாடி பழனிசாமி உருட்டப்பட்டு இருக்கிறார் என்பதுதான் இதிலிருந்து தெளிவாகிறது. இது போன்ற உருட்டல் மிரட்டல்கள் எல்லாம் திமுகவிடம் எந்த காலத்திலும் எடுபடாது என்பது டெல்லி ஜாம்பவான்களுக்கு தெரியும். ஆகவே வளைந்து கொடுக்க தயாராக இருப்பவர்களை வளைக்க முற்படுவது இயற்கை தானே. என்ன நடந்தது என்பதை அண்ணாமலையிடம் கேட்டால் சொல்லிவிடுவார். தமிழக முதல்வரை பொறுத்தவரை நாகரிக அரசியலுக்கு சொந்தக்காரர் அடுத்த கட்சியில் என்ன நடக்கிறது என்பதை எப்பொழுதும் விமர்சிக்காதவர்.

நாங்கள் கூட்டணியில் பலமாக இருக்கிறோம். மக்கள் எங்களோடு கூட்டணி வைத்திருக்கிறார்கள். 2026 தேர்தலை நோக்கி எங்களுடைய காய்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது. மற்ற பிரச்சனைகள் பற்றி, மக்கள் பிரச்சனைகளை பற்றி கவலை படுகின்ற இயக்கம் திமுக தவிர மற்ற இயக்கங்களில் பிரச்சனைகள் பற்றி எப்பொழுதும் எங்கள் முதல்வர் கவலைப்பட்டது கிடையாது. நாடு ஜனநாயக நாடாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுகின்ற நாடாக இருக்க வேண்டும் என்றார்.

நாட்டில் அவதூறான பிரச்சாரங்களை பரப்பி அதன் வாயிலாக சட்டம் ஒழுங்கை கெடுமா என்று எதிர்பார்க்கிறார்கள் சட்டம் ஒழுங்கை ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையாக இந்த காவல்துறையை இயக்குகின்றார் முதலமைச்சர். அவர் இருக்கின்ற வரை இதுபோன்ற அவதூறுகள் பிரச்சனைகளால் எந்த விதமான சட்ட ஒழுங்கு பாதிக்காது என்றார். அமித்ஷாவின் எக்ஸ் தள பதிவில் சொல்லி இருந்த தமிழ்நாட்டில் மது வெல்லமும் ஊழல் புயலும் என்பது தொடர்பான கேள்விக்கு? அவர் உத்திரபிரதேசம் என நினைத்து சொல்லி இருப்பார் என்று பதில் அளித்து சென்றார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ்-ம் நானும் பிரிந்தது பிரிந்ததுதான்.. இனி சேர்வதற்கு சாத்தியமே இல்லை.. இபிஎஸ் திட்டவட்டம்..!