மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட பெரிய கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சித்ராதேவி. இவரது கணவர் கார்த்திகேயன் கூலி தொழில் செய்து வரும் நிலையில் இவர்களுக்கு மணிகண்டன் மற்றும் தருண் என்ற இரண்டு செவித்திறன் குறைபாடு உள்ள 2 மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ளனர்.
மூத்த மகன் மணிகண்டனுக்கு செவித்திறன் குறைபாடு சரி செய்வதற்கான மருத்துவ செலவிற்காகவும், சித்ராதேவியான் மருத்துவ செலவிற்காகவும் 6 லட்சம் ரூபாய் வரை மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனம் மூலமாகவும், வட்டிக்கும் சிலரிடம் பணம் வாங்கியுள்ளார். இந்நிலையில் 100 நாட்கள் வேலை மற்றும் கூலித்தொழில் செய்யும் கணவனின் வருமானம் ஆகியவற்றை வைத்து தொடர்ந்து வட்டி பணத்தையும் லோன் பணத்தையும் செலுத்தி வந்துள்ளார் சித்ராதேவி
இதனிடையே சில வாரங்களாக போதிய வருமானம் இல்லாத நிலையில் பணம் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார் இதனால் கடந்து சில தினங்களாக லோன் பணம் கேட்டும், வட்டி பணம் கேட்டும் இரவு நேரங்களில் தனது வீடு தேடி வந்து சிலர் ஆபாசமாக பேசுவதாகவும் வட்டி பணம் செலுத்தவில்லை என்றால் சாவு என கூறுவதாகவும்,
இதையும் படிங்க: திருத்தணி காய்கறி சந்தைக்கு மீண்டும் காமராசர் பெயர்.. பாமக தலைவர் அன்புமணி மகிழ்ச்சி..!

இதனால் குழந்தைகள் பள்ளிக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வீடு தேடி வந்து கடன் கேட்பதால் தனது கணவரும் வீட்டை விட்டு சென்று விட்டதால் தான் கடனை செலுத்துவதற்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டியும் தன்னை அவதூறாக பேசி கந்துவட்டி கேட்டு மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சித்ராதேவி இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை சந்தித்து புகார் மனு அளித்தார். அப்போது கடன் தொல்லையால் தங்களால் வாழ இயலவில்லை எங்களை கருணை கொலை செய்துவிடுங்கள் என கண்ணீர்மல்க தெரிவித்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கண்ணீர் மல்க பேசிய சித்ராதேவி தான் மருத்துவ செலவிற்காக கடன் வாங்கிய நிலையில் தற்போது வட்டி கேட்டும் லோனை உடனடியாக கட்டச் சொல்லியும் வீடு தேடி இரவில் வந்து தன்னை தொந்தரவு செய்வதாகும் ஆபாசமாக பேசுவதால் தன் குழந்தைகள் பள்ளிக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்
அப்போது இரண்டு மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கும் காது கேட்பதற்காக ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் ஏதேனும் சிறப்பு நிதி மூலமாக அவர்களுக்கான காது கேட்கும் கருவியை பொறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறிய மாவட்ட ஆட்சித் தலைவர்,

இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகள் இருவரையும் விடுதியில் தங்க வைத்து அவர்களுக்கான உரிய பயிற்சி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், கந்து வட்டி மற்றும் லோன் கேட்டு தொந்தரவு செய்வது தொடர்பாக மாவட்ட காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டார்.
கண்ணீர் மல்க தங்களை கருணை கொலை செய்து விடுங்கள் என கூறி மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் மனு அளிக்க வந்த சித்ரா தேவியிடம் அரசு காது கேட்கும் கருவி இலவசமாக வழங்கும் நிலையில் ஏன் பணம் கொடுத்து வாங்கினீர்கள் எனவும் உங்கள் மகன்களுக்கு செவித்திறன் கிடைப்பதற்கான நடவடிக்கையை அரசு சார்பில் எடுப்போம் எனவும் ஆறுதல் தெரிவித்ததோடு நன்கு படிக்க வையுங்கள் என கூறி அந்த மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் நலம் விசாரித்தார்.
தாயுடன் வந்த மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளிடம் நலம் விசாரித்து நன்கு படிக்க வேண்டும் என அறிவுரை வழங்கியதோடு அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக கூறிய மாவட்ட ஆட்சியரின் செயலை பார்த்து அதிகாரிகள் நெகிழ்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க: எதிர்ப்புக்கு பணிந்தது திமுக அரசு.. திருத்தணி மார்க்கெட்டுக்கு காமராஜர் பெயர்.. தமிழக அரசு அறிவிப்பு!