மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 29 வயது இளைஞருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அவர் சுனாபட்டியில் வசிக்கும் கம்ரான் கான். 2023 ஆம் ஆண்டு காவல்துறையினரை அழைத்து, பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கொலை செய்வதாக கம்ரான் கான் மிரட்டி இருந்தார். ஜேஜே மருத்துவமனையை வெடிகுண்டு வைத்து தகர்ப்பதாகவும் அவர் கூறியிருந்தார். தாவூத் இப்ராஹிமின் கும்பலைச் சேர்ந்தவன் என்பது தெரிய வந்தது.
கம்ரான் கானின் இந்த நடவடிக்கையை நீதிமன்றம் தீவிரமாக எடுத்துக் கொண்டது. நீதிபதி ஹேமந்த் யூ ஜோஷி இதுகுறித்து,''கம்ரான் கான் செய்தது அரசிற்கும், மூத்த தலைவர்களுக்கும் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. கம்ரான் கானுக்கு கருணை காட்டுவது சரியாக இருக்காது. கம்ரான் கான் காரணமாக முழு காவல்துறையும் உஷார் நிலையில் இருக்கிறது. கம்ரான் கான் இதற்கு முன்பும் இதே போன்ற குற்றங்களைச் செய்துள்ளார்'' என்று கூறினார்.

கம்ரான் கானின் வழக்கறிஞர், ''அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்'' என்று கூறினார். ஆனால், நீதிமன்றம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு வழக்கறிஞரிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றம் கூறியது. கம்ரான் கான் போலீசாரால் கைது செய்யப்பட்டு, அன்றிலிருந்து சிறையில் உள்ளார். இப்போது அவரது சிறைத்தண்டனை தொடங்கிவிட்டதாக நீதிமன்றம் கூறியுள்ளது.
இதையும் படிங்க: பாஜக-ஆர்.எஸ்.எஸ்-ஐ வீழ்த்தியாகணும்.. மதசார்பற்ற சக்திகள் ஒன்னு சேருங்க.. அழைப்பு விடுக்கும் பிரகாஷ் காரத்.!!
நவம்பர் 20, 2023 அன்று மும்பை காவல் ஆணையரின் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அழைப்பு வந்ததாக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மோடியையும், ஆதித்யநாத்தையும் கொல்ல தாவூத் இப்ராஹிமின் கும்பலைச் சேர்ந்த ஒருவர் தனக்கு ரூ.5 கோடி கொடுத்ததாகக் கூறியதாக போனில் அழைத்தவர் கூறினார். காவல்துறை தனது புகாரை பெரிதாக எடுத்துக் கொள்ளாததால், ஜேஜே மருத்துவமனையின் மீது குண்டு வீசப் போவதாகவும் அவர் கூறினார்.

அப்போது பெண் போலீஸ், கம்ரான் கானிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, அவரையும் மிரட்டினார். அப்போது தாவூத் கும்பலைச் சேர்ந்ததாகக் கூறப்படும் இப்ராஹிம் காலியா என்ற நபரைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார். அந்தப் பெண் போலீஸ்காரர் தனது மேலதிகாரியிடம் போனை கொடுப்பதாகக் கூறியதும், அவர் அழைப்பைத் துண்டித்துவிட்டார். இதன் பின்னர் அந்த பெண் போலீஸ்காரர் தனது மூத்த அதிகாரிகளுக்கு இது குறித்து தெரிவித்தார்.
பின்னர், ஆசாத் மைதான காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் மிரட்டல் விடுத்தவர், கம்ரான் கான் என்பதை அறிந்து, அவர் கைது செய்யப்பட்டார். அவனது குரலை வைத்து அடையாளம் காணப்பட்டது. ஆதித்யநாத்தை கொலை செய்வதாக அவர் முன்பு மிரட்டியதும் தெரிய வந்தது.கம்ரான் கானின் மொபைல் போனை போலீசார் கைப்பற்றி விசாரணைக்கு அனுப்பினர்.அவரது அழைப்பு விவர பதிவுகள் எடுக்கப்பட்டு, போலீசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர், புகார் அளித்த பெண் போலீஸ் அதிகாரி, விசாரணையில் ஈடுபட்ட மற்ற போலீஸ் அதிகாரிகள், தொலைபேசி மீட்கப்பட்ட நேரத்தில் இருந்த ஒரு சாட்சி மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் அதிகாரி ஆகியோரை ஆஜர்படுத்தினார். அந்த தொலைபேசி எண் கம்ரான் கான் பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதே நாளில் காவல்துறை உதவி எண்ணுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தொலைத்தொடர்பு நிறுவன அதிகாரி தெரிவித்தார்.
கம்ரான் கானின் வழக்கறிஞர், அவர் மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இதற்கு நீதிபதி, "அவரது வாக்குமூலங்களை வைத்து மட்டுமே அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூற முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர் பலமுறை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை முழுவதும், குற்றம் சாட்டப்பட்டவரின் நடத்தை எந்த வகையிலும் அசாதாரணமாகத் தெரியவில்லை. எனவே, குற்றம் சாட்டப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.

கம்ரான் கான் மீது ஐபிசி பிரிவுகள் 505(2) மற்றும் 506(2) இன் கீழ் கம்ரான் கான் குற்றவாளி என்று நீதிமன்றம் கண்டறிந்தது. பிரிவு 505(2) மக்களிடையே பகைமை, வெறுப்பு அல்லது தவறான உணர்வுகளை உருவாக்கும் நோக்கத்தை கொண்டது.பிரிவு 506(2) குற்றவியல் மிரட்டலைக் கையாள்கிறது. இதில் கொலை, கடுமையான காயம், தீ வைத்து சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதாக அச்சுறுத்தல்கள் அடங்கும். மேலும், அவருக்கு 1,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து நீக்கமா.? பாஜக துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் விளக்கம்!!