சட்டமன்ற தேர்தலுக்கு நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதன்படி 2026 தேர்தலுக்கான அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. மறுபுறம் தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக என்பது பெண்களுக்கு எதிரான கட்சி என கடுமையாக சாடியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், அதிமுக பாஜக கூட்டணி உறுதியாவதில் நீண்ட இழுபறி இருந்ததாக எனச் சிலர் சொல்கிறார்கள். ஆனால், அதெல்லாம் இல்லை. அமித் ஷா சென்னை வந்திருந்தார். அப்போது தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அன்றைய தினமே கூட்டணி உறுதியானது.

பிரஸ் மீட்டை வைத்து கூட்டணயை அறிவித்துவிட்டோம். எனவே, நீண்ட இழுபறி என்பதில் உண்மை இல்லை. கூட்டணியாகத் தேர்தலைச் சந்திப்போம். அதேநேரம் ஆட்சியில் பங்கு கேட்போமா என்பது குறித்து இப்போது பேச முடியாது. 2026ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தலைச் சந்திக்கும் என்றும் அந்தக் கூட்டணியில் அதில் அதிமுக இருக்கும் என்றும் அமித் ஷா சொல்லியிருக்கிறார். அதையே தான் நானும் இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். ஜெயலலிதா ஒவ்வொரு வீட்டிற்கும் மிக்ஸி, கிரைண்டர், பேன், தாலிக்குத் தங்கம் என அனைத்தையும் இலவசமாகக் கொடுத்தார்.
இதையும் படிங்க: முதல்வரே இன்னும் ஒரு வருஷம் ஆட்டம் போடுங்க.. திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் பாஜக - அதிமுக கூட்டணி.. நயினார் நாகேந்திரன் சரவெடி!

முதல் பட்டதாரிகளுக்குக் கூட சலுகை கொடுத்தார். ஆனாலும் 2006ல் அதிமுக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. ஒரு வாக்குறுதி அது குறிப்பிட்ட ஒரு தேர்தலில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும். அடுத்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே நிச்சயம் மக்கள் வாக்களிப்பார்கள். திமுக என்பது பெண்களுக்கு எதிரான கட்சி. திமுக தலைவர்கள் பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து பேசி வருகிறார்கள். பொன்முடி பேசியது மிக மோசமான பேச்சு. அப்படி இருந்தபோதிலும் முதல்வர் அவர் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்.

எல்லாவற்றுக்கும் தமிழக மக்கள் 2026ல் பதில் சொல்வார்கள். இனியும் இதுபோல ஒரு கட்சி தமிழகத்தில் இருக்க வேண்டுமா என்பதை நான் கேட்க விரும்புகிறேன். அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் அஞ்சுகிறார். பொதுவாக அரசு எந்தவொரு தொழிலும் செய்யக்கூடாது.
ஆனால், இது மக்கள் சேவை என்பதால் செய்து தான் ஆக வேண்டும். இதில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்றால் அதை ஏற்று போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசுதான் அதிக நிதி ஒதுக்க வேண்டும். அதுவே அரசின் கடமை. ஆனால், அதை அரசு செய்வதில். அது நிர்வாக கோளாறு தானே தவிர வேறு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் செருப்பு அணிய இவர் தான் காரணம்! திமுக ஆட்சி அகற்றப்படும்.. அண்ணாமலை நம்பிக்கை..!