தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து விடைபெறுகிறார் அண்ணாமலை. 2021 ஜூலை 8-ல் பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட அண்ணாமலை 4 ஆண்டுகள் அப்பொறுப்பில் இருந்தார்.

அண்ணாமலை தலைமையில் 2024 மக்களவைத் தேர்தலை தமிழ்நாடு பாஜக எதிர்கொண்டது. இந்நிலையில் கமலாலயத்தில் வைக்கப்பட்டு இருந்த அண்ணாமலையின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது. அவரது பெயர்ப்பலகையும் அழைக்கப்பட்டுள்ளது.
விருப்ப மனு தாக்கல் 2 மணிக்கு மேல் தொடங்கியநிலையில், ஒரு சில மணி நேரத்துக்கு முன்பே பாஜக அலுவலகம் வந்த நயினார் நாகேந்திரன், அலுவலக வாயிலைத் தொட்டுக்கும்பிட்டுவிட்டு உள்ளே சென்றபோதே, அவர்தான் புதிய தலைவர் என்று சூசகமாகப் புரிந்துகொள்ள முடிந்ததாக அங்கிருந்த பாஜக தொண்டர்கள் கூறியுள்ளனர். பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்ட பேனரிலும் நயினார் நாகேந்திரன் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. நயினார் நாகேந்திரன் பெயரை அண்ணாமலை எல்.முருகன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பரிந்துரைத்தனர்.

இதையும் படிங்க: தலைவர் பதவி: அண்ணாமலை அவுட்... நயினாருக்கு ஆப்பு... விதியை மாற்றிய பாஜக..!
இதனையடுத்து தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவர் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாஜக முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழக பாஜக தலைவராக தற்போது இருக்கும் அண்ணாமலை மாற்றிவிட்டு, அவருக்கு பதிலாக சட்டப்பேரவை பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன் அடுத்த தலைவராக நியமிக்கப்படுவார் என கட்சி வட்டாரங்களில் கூறப்பட்டு வந்தது. இதை உறுதி செய்யும் காட்சிகளும் தமிழக பாஜகவில் அரங்கேறின.
இதையும் படிங்க: காலரை தூக்கிவிட்டு கெத்தா வரப்போகும் நயினார் நாகேந்திரன்; டெல்லி பறந்ததன் பரபர பின்னணி...!