அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி இணைந்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக இது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி என்று விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் இரட்டை இலைக்கு மேல் தாமரை மலரும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், தலைமை சொல்வதை அனைவரும் கேட்க வேண்டும் என்றும் கூட்டணி குறித்து ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்தால், அது வேறு விதமாக போய்விடும்., அதனால் நமது கூட்டணி உறுதியான கூட்டணி, இறுதியான கூட்டணி என்று கூறினார். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்றும் இந்த கூட்டணி சாதாரண கூட்டணி அல்ல. வெற்றி கூட்டணி எனவும் கூறினார். நமது கூட்டணியை முதலமைச்சர் சந்தர்ப்பவாத கூட்டணி என்று கூறியுள்ளதாக குறிப்பிட்டு பேசிய அவர், நமது கூட்டணிதான் நியாயமான கூட்டணி, நேர்மையான கூட்டணி, ஊழல் இல்லாத கூட்டணி என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வருவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணி.. அதிமுகவுடன் உறவை முறித்த முக்கிய கட்சி.. அழிவு உறுதி என அதிமுகவுக்கு சாபம்!!
இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணி.. கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு தடபுடலாக விருந்து.. இபிஎஸ் உற்சாக முடிவு.!