×
 

ராணுவம் குறித்து பொய் தகவல்... இந்தியாவின் அடுத்த கட்ட நகர்வு..!

பாகிஸ்தானைச் சேர்ந்த 16 youtube சேனல்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. வாகா எல்லை மூடப்பட்டதுடன் இந்தியாவில் உள்ள விசா பெற்ற பாகிஸ்தானியர்கள் வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் ஏவுகணை சோதனைகளை இந்திய ராணுவ படையினர் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஏவுகணை சோதனைகள் தொடர்பாக பல்வேறு வீடியோக்களையும் இந்திய ராணுவத்தினர் வெளியிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இன்னும் தூக்கம் தெளியலையா? உளவுத்துறை என்ன செஞ்சிட்டு இருந்தது? முக்கிய அமைச்சர் சரமாரி கேள்வி..!

இந்த நிலையில், பகல்காம் தாக்குதல் விவகாரத்தில் இந்திய ராணுவத்திற்கு எதிராக தவறான தகவல்களை பாகிஸ்தானை சேர்ந்த youtube சேனல்கள் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பாகிஸ்தானைச் சேர்ந்த 16 youtube சேனல்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பகல்காம் தாக்குதல்..! பாகிஸ்தானியர்களுக்கு மத்திய அரசு விதித்த கெடு நிறைவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share