பகல்காம் தாக்குதல்..! பாகிஸ்தானியர்களுக்கு மத்திய அரசு விதித்த கெடு நிறைவு..!
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு விதித்த காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது.
பகல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், உலக நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்து உதவி கரம் நீட்டி வருகின்றனர்.
பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் விதமாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சிந்து நதியின் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்து உத்தரவிட்டது. வாகா எல்லை மூடப்பட்டதுடன் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற 48 மணி நேரம் கெடு விதித்தது. மேலும் பாகிஸ்தானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறும் அறிவுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி குடும்பத்துக்கு 50 லட்சம் நிதியுதவி! ஹரியானா அரசு அறிவிப்பு...
மருத்துவ விசா பெற்றுள்ள பாகிஸ்தானியர்களை தவிர மற்ற அனைவரும் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன்படி இந்தியாவில் உள்ள விசா பெற்று வாழ்ந்து வரும் பாகிஸ்தானியர்கள் நாடு திரும்ப தொடங்கினர். இதனிடையே பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு விதித்த 48 மணி நேர காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இதையும் படிங்க: பைசாரன் பள்ளத்தாக்கு திறக்கப்பட்டதை பாதுகாப்பு படையினருக்கு தெரிவிக்கவில்லை.. அரசு ஒப்புதல்..!