பயங்கரவாதத்தின் புதிய முகம்.. இந்தியாவில் வசிக்கும் 5 லட்சம் பாக்., பெண்கள்.. அதிர்ச்சி தகவல்..!
சமீப காலமாக இதுபோன்ற பெண்கள் திருமணமாகி நீண்ட காலமாக இந்தியாவில் வசித்து வருகின்றனர்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பாஜக., எம்.பி நிஷிகாந்த் துபே மீண்டும் பெரும் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ''நாட்டிற்குள் நுழைந்த எதிரிகளை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது? இந்தியாவில் திருமணம் செய்து கொண்டு இங்கு தங்கியிருக்கும் சுமார் 5 லட்சம் பாகிஸ்தான் பெண்கள் நாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் இன்னும் பாகிஸ்தான் குடிமக்கள்'' என அதிர்ச்சி கிளப்பி உள்ளார்.
அதேவேளை, நேற்று அதாவது ஏப்ரல் 27 ஆம் தேதி, அந்த காலக்கெடு முடிவடைந்துவிட்டது. அதில் சில வகையான பாகிஸ்தான் விசா வைத்திருப்பவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜார்கண்டின் கோட்டாவைச் சேர்ந்த பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, தனது எக்ஸ்தளப்பதிவில்,''பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் புதிய முகம் இப்போது வெளிப்பட்டுள்ளது 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பெண்கள் திருமணமான பிறகு இந்தியாவில் வாழ்கின்றனர். இன்றுவரை அவர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்கவில்லை. உள்ளே நுழைந்த இந்த எதிரிகளை எப்படி எதிர்த்துப் போராடுவது?'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: சட்டவிரோத நிதி வழக்கு! ஜவாஹிருல்லாவின் தண்டனைக்கு இடைக்கால தடை
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு துபே தொடர்ந்து பாகிஸ்தானை குற்றம்சாட்டி வருகிறார். முன்னதாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் மோடி அரசின் முடிவு குறித்து, 'பாகிஸ்தானியர்கள் தண்ணீரின்றி இறந்துவிடுவார்கள். இது 56 அங்குல மார்பு. ஹூக்கா, உணவு, தண்ணீர் நிறுத்தப்படும். நாங்கள் சனதானி பாஜகவின் தொழிலாளர்கள். நாங்கள் உங்களை சித்திரவதை செய்து கொன்றுவிடுவோம்'' எனத் தெரிவித்தார்.
திருமணத்திற்குப் பிறகு இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியப் பெண்களின் எண்ணிக்கையை துபே கொடுத்துள்ளார். ஆனால் இந்த புள்ளிவிவரங்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டன என்பதை அவர் வெளியிடவில்லை. ஆனால், செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ தகவல்படி, ஞாயிற்றுக்கிழமை அட்டாரி எல்லையின் நெறிமுறை அதிகாரி, கடந்த மூன்று நாட்களில் 537 பாகிஸ்தானிய குடிமக்கள் அங்கிருந்து பாகிஸ்தானுக்குத் திரும்பியுள்ளதாகக் கூறினார். இவர்கள் அனைவரும் குறுகிய கால விசாக்களில் இந்தியாவிற்கு வந்தவர்கள்.
அனாலும், சமீப காலமாக இதுபோன்ற பெண்கள் திருமணமாகி நீண்ட காலமாக இந்தியாவில் வசித்து வருகின்றனர். ஆனால் அவர்களின் குடியுரிமை இன்னும் பாகிஸ்தானியராகவே உள்ளது. உதாரணமாக, பாகிஸ்தானைச் சேர்ந்த சாரதா குக்ரேஜா என்பவர் கடந்த 35 ஆண்டுகளாக ஒடிசாவின் பலங்கிர் மாவட்டத்தில் வசித்து வருவதாகவும், அவரது கணவர் இந்திய குடிமகன் என்றும் தெரிய வந்தது. ஆனாலும், அவருக்கு இந்தியாவை விட்டு வெளியேற நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அவர்கள் இந்துக்களாக இருப்பதற்காக துன்புறுத்தப்பட்ட பின்னர் பாகிஸ்தானிலிருந்து வந்திருப்பதால், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமையைப் பெற அவர்களுக்கு உரிமை உண்டு. அவரது மேலும் நான்கு உடன்பிறப்புகள் இந்தியாவில் அவருடன் வசித்து வருவதாக அறியப்படுகிறது. அவரது உறவினர்கள் யாரும் பாகிஸ்தானில் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதேபோல், பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தில் இரண்டு பாகிஸ்தானிய பெண்கள் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். அவர்களில், அஸ்ரி பேகம் திருமணமாகி முப்பது ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வருகிறார். அவருக்கு ஐந்து குழந்தைகளும் உள்ளனர். இரண்டாவது பாகிஸ்தானியப் பெண்ணின் பெயர் அஸ்மா. அவர் பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்தவர். இரண்டு பாகிஸ்தானிய பெண்களிடமும் நீண்ட கால விசாக்கள் இருந்ததாகவும், அவை தடை செய்யப்படவில்லை என்றும், அவர்கள் தொடர்ந்து இந்தியாவில் தங்கலாம் என்றும் போஜ்பூர் போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பயங்கரவாதிகள் ஆயுதக் குழுக்களா..? பிபிசி கருத்துக்கு மத்திய அரசு அதிருப்தி..!