சட்டவிரோத நிதி வழக்கு..! ஜவாஹிருல்லாவின் தண்டனைக்கு இடைக்கால தடை..!
சட்டவிரோத நிதி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் ஜவாஹிருல்லாவுக்கு வழங்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது
கடந்த 1997 முதல் 2000-ம் ஆண்டு வரை வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக 1.55 கோடி ரூபாய் பணம் பெற்றதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், எம்எல்ஏ-வுமான ஜவாஹிருல்லா மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் கூடுதல் குற்றவியல் நீதிமன்றம் ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இந்த சிறை தண்டனையை எதிர்த்து ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவர்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை உறுதி செய்தது. இந்த தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் ஒரு மாத காலத்திற்கு தண்டனை நிறுத்தி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஜவாஹி உள்ள மேல்முறையீடு செய்த நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பரபரப்பான அரசியல் சூழல்... முதல்வர் மு.க ஸ்டாலினுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு!!
இதையும் படிங்க: கடலூரை உலுக்கிய கௌரவ கொலை வழக்கு..! உச்சநீதிமன்றம் எடுத்த முக்கிய முடிவு..!