×
 

பஸ் 6 அடி.. ஆளு 7 அடி.. கண்டக்டருக்கு வந்த புது சோதனை..!

தெலங்கானாவில் ஆறு அடி பேருந்தில் 7 அடி உயர வாலிபருக்கு கண்டக்டர் வேலை கிடைத்ததால் கழுத்து வலியால் அவதி அடைந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் வேலை செய்யும் இடத்தில் பலவிதமான பிரச்சனைகள் வரும். அவற்றை எப்படியாவது சமாளித்துவிட்டு நாமும் வேலை செய்து வருவோம். ஆனால் தெலுங்கானாவில் ஒரு வாலிபருக்கு வந்துள்ள பிரச்சனையை மிகவும் வினோதமானது. ஏழு அடி கொண்ட வாலிபர் ஒருவருக்கு பேருந்தில் நடத்துனராக பணி கிடைத்துள்ளது. ஆனால் பேருந்தின் உயரமோ வெறும் ஆறு அடிதான். இதனால் தன் கழுத்தை வளைத்தபடி மிகவும் அசௌகரியமாக தனது வேலையை பார்த்து வந்துள்ளார் அந்த வாலிபர். இதனால் தான் பெரும் அவஸ்தை அடைந்து வருவதாகவும் கழுத்து வலியால் அவதி அடைந்து வருவதாகவும் புலம்புகிறார். 

தெலங்கானா மாநிலம் சந்திரயாங் பேட்டையை சேர்ந்தவர் அமீன் அகமது அன்சாரி. இவரது தந்தை கச்சேகுடா போக்குவரத்து பணிமனையில் காவலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு உடல் நல குறைவால் அன்சாரியின் தந்தை உயிரிழந்த நிலையில் கருணை அடிப்படையில் அவருக்கு பேருந்தில் நடத்துணர் வேலை கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: மனைவியுடன் கள்ளத்தொடர்பு..! வாடகைக்கு குடியிருந்தவரை உயிருடன் புதைத்த உரிமையாளர்..!

அமீன் அகமது அன்சாரி உயரம் ஏழு அடி. ஆனால் ஆறு அடி உயரம் கொண்ட பேருந்தில் அவருக்கு நடத்துனர் வேலை வழங்கப்பட்டதால் தினமும் சுமார் 10 மணி நேரம் தலையை குனிந்தபடியே வேலை செய்து வருவதாகவும் இதனால் பெரும் அவஸ்தை அடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அன்சாரியின் நிலையை பார்க்கும் பயணிகள் அனைவரும் அவர் மீது பரிதாபம் கொண்டனர். 

பத்து மணி நேரத்துக்கு மேலாக கழுத்தை குனிந்த படி அசவுகரியமாக வேலை செய்ததால் அவருக்கு கழுத்து முதுகு வலி மற்றும் தூக்கமின்மை உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவரிடம் சென்று அடிக்கடி சிகிச்சை பெற்று வருகிறார் அன்சாரி. தொடர்ந்து கழுத்து வலியால் அவதிப்பட்டு வருவதாக பயணிகளிடம் அன்சாரி புலம்பி வந்த நிலையில் போக்குவரத்து கழக பணிமனையில் அன்சாரிக்கு வேறு பணி வழங்க வேண்டும் என்று பேருந்து பயணிகள் அனைவரும் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் போக்குவரத்து பணிமனையில் அவருக்கு வேறு வேலை வழங்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. 

இதையும் படிங்க: 96 படம் போல ரீயூனியன்.. பள்ளி நண்பனுடன் தொடர்பு.. 3 குழந்தைகளை கொன்ற கொடூர தாய்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share