தீவிரவாதிகளின் கொடூர தாக்குதல்.. உயிரிழந்தோருக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி..!
பகல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுற்றுலா பயணிகளில் மகாராஷ்டிரா, ஒடிசா, தெலங்கானா, ஹரியானா, கர்நாடகாவை சேர்ந்தவர்கள் அதிக அளவில் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், பகல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ நகரில் வைக்கப்பட்டுள்ள உடல்களுக்கு மலர் வளையம் வைத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி செலுத்தினார்.
இதையும் படிங்க: பாரமுல்லாவில் பதற்றம்..! 2 தீவிரவாதிகளை வேட்டையாடிய ராணுவம்..!
பயங்கரவாத தாக்குதலை கண்டித்து ஜம்மு காஷ்மீர் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அங்கு சென்று அமைச்சர் அமித்ஷா ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
இதையும் படிங்க: தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம்..! ஜம்மு காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம்..!