பேபிஸ்களுக்கு இந்தியா தான் பெஸ்ட்.. வைரலாகும் அமெரிக்க பெண்ணின் கருத்து!!
இந்தியாவில் வாழ்வது குறித்து அமெரிக்க பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினர் இங்குள்ள கோவில்கள், கலாச்சாரங்கள், கலைகள் என பல்வேறு விஷயங்களை கண்டு வியக்கின்றனர். மேலும் இங்கு உள்ள சுற்றுலா தளங்களை காண வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவ்வாறு வரும் சிலர் இங்கேயே தங்கி விடுவதும் வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 4 வருடத்திற்கு முன்பு இந்தியா வந்த அமெரிக்கப் பெண் ஒருவர், தனது இன்ஸ்டா பகத்தில் போட்ட பதிவு வைரலாகி வருகிறது. அமெரிக்காவை சேர்ந்தவர் கிறிஸ்டன் பிஷ்ஷர்.
இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. கடந்த 4 வருடத்திற்கு முன் இந்தியா வந்த அவர் இங்கேயே தங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், எனது குழந்தைகள் இந்தியாவில் வளர்வதன் மூலம் பயனடைவார்கள். அவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தை அமெரிக்காவிற்குப் பதிலாக இந்தியாவில் கழிப்பதால் ஏற்படும் நன்மைகள் என கூறி அதற்கான காரணங்களையும் கூறியுள்ளார். இதுக்குறித்த அவரது பதிவில், கலாச்சார விழிப்புணர்வு மற்றும் தகவமைத்துக் கொள்ளும்: இந்தியாவில் வளரும்போது எனது குழந்தைகளுக்கு பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்கிறார்கள்.
இதையும் படிங்க: என்னம்மா.. இப்பிடி பண்றீங்களேமா? திருமணமான ஒன்றரை மாதம்.. ஆத்திரத்தில் கணவரின் நாக்கை கடித்து துப்பிய மனைவி..!
இது அவர்களுக்கு பல்வேறு கலாச்சாரங்கள் குறித்த ஆழமான புரிதலை வழங்கும். இதன் மூலம் புதிய விஷயங்களை அவர்கள் திறந்த மனதோடு அணுகுவார்கள். மேலும், தகவமைத்துக் கொள்ளும் திறனும் அவர்களுக்கு அதிகரிக்கும். பலமொழிகள்: இந்தியா என்பது பல வகையான மொழிகளின் தாயகம் ஆகும். இதனால் எனது குழந்தைகள் இந்தியைக் கற்றுக் கொள்வார்கள். மேலும் ஆங்கிலத்துடன் வேறு பல மொழிகளையும் அறிந்துகொள்வார்கள். இதுபோல பல்வேறு மொழிகளைப் பேசும்போது தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்துகிறது. எதிர்கால வேலை வாய்ப்புகள் மேம்படுத்துகிறது.
உலகளாவிய பார்வை: இந்தியாவில் வளரும்போது,எனது குழந்தைகளுக்கு உலகம் குறித்துத் தெளிவான புரிதல் கிடைக்கும். சர்வதேச பிரச்சினைகள், பிராந்திய சவால்கள் மற்றும் மாறுபட்ட சமூகங்கள் குறித்துத் தெரிந்து கொள்கிறார்கள். இது அவர்களுக்குச் சர்வதேச கண்ணோட்டத்தை வளர்க்க உதவுகிறது. சுதந்திரமாக இருப்பது: வேறு நாட்டிற்குச் செல்லும்போது குழந்தைகள் புதிய பள்ளி முறைக்கு மாற்றுவது முதல் உள்ளூர் பழக்கவழக்கங்களைப் புரிந்து கொள்வது வரை பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும். இது அவர்களின் சிக்கல் தீர்க்கும் திறன்கள் மற்றும் சுதந்திரத்தை மேம்படுத்துகிறது.
எமோஷ்னல் நுண்ணறிவு: இந்தியாவில் உள்ள பல்வேறு சமூக முறைகளை அவர்கள் பார்க்கிறார்கள். இங்குள்ள குடும்ப கட்டமைப்புகளைப் பார்க்கிறார்கள். இது அவர்களின் எமோஷ்னல் நுண்ணறிவு (Emotional Intelligence) வளர்க்க உதவும். அவர்கள் பல்வேறு வகையான மக்களுடன் தொடர்பு கொள்ளவும், பல்வேறு விஷங்களைப் புரிந்து கொள்ளவும் உதவும். இதன் மூலம் அவர்களின் சமூகத் திறன்களை மேம்படுகிறது. வலுவான குடும்பப் பிணைப்புகள்: இந்தியக் குடும்பங்களில் நெருக்கமான உறவு இருக்கும். உறவினர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இது எனது குழந்தைகளுக்கு உறவினர்களின் முக்கியத்துவத்தை உணர உதவுகிறது. இது அமெரிக்க மாடலில் இருந்து மிகவும் வித்தியாசமானது. எளிமை மற்றும் நன்றி உணர்வு: பணக்காரர்கள் வறுமையில் இருப்போர் என இரு தரப்பும் இருக்கும் நாடுகளில் வளரும்போது தான் குழந்தைகளுக்கு நன்றியுணர்வு, எளிமை மற்றும் தங்களிடம் இருப்பதை நினைத்துச் சந்தோசப்படும் பண்புகள் அதிகரிக்கும். சர்வதேச தொடர்பு : எனது குழந்தைகள் உலகம் முழுவதும் இருந்து வரும் மக்களுடன் நட்பை உருவாக்குவார்கள். இது அவர்களின் வாழ்க்கையின் பிற்பகுதியில் நிச்சயம் பெரியளவில் உதவும் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: இரும்பிலே இருதயம் முளைக்குதோ..! ரோபோவுடன் டேட்டிங் போகும் இளைஞர்.. சீனாவில் வினோதம்..