×
 

என்னம்மா.. இப்பிடி பண்றீங்களேமா? திருமணமான ஒன்றரை மாதம்.. ஆத்திரத்தில் கணவரின் நாக்கை கடித்து துப்பிய மனைவி..!

ராஜஸ்தானில் திருமணமான ஒன்றரை மாதங்களில் மனைவி ஒருவர் கணவரின் நாக்கை கடித்து துப்பிய நிகழ்ச்சி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜலவர் மாவட்டத்தில் பகானி நகர் பகுதியை சேர்ந்தவர் கணையாலால். அதேபகுதியில் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும் ரவீனா  என்ற பெண்ணுக்கு கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணம் ஆனதில் இருந்தே இருவரும் சிறு சிறு சண்டைகளுக்கு எல்லாம் அதிகமாக ரியாக்ட் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் மற்றவர் குடும்பத்தினரை பற்றி பேசி, சண்டையிட்டபடி இருந்துள்ளனர்.

இவர்களின் சண்டை, குடும்பத்தினருக்கும் அக்கம் பக்கத்தினருக்கும் தெரிந்த விடயம் என்பதால் அவர்களும் இதுகுறித்து அலட்டிக் கொள்ளாமல் இருந்துள்ளனர். நாளுக்கு நாள் இவர்களது சண்டை அதிகரித்துக் கொண்டே இருந்துள்ளது. ஆரம்பத்தில் வெறும் வாய் வார்த்தையாக இருந்த சண்டை, போகபோக கைகலப்பாகவும் மாறி இருக்கிறது.

இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வது அவர்களுக்குள்ளும் சகஜமானதாக மாறி இருக்கிறது. இந்ந்நிலையில் ஒருநாள் அவர்கள் இருவருக்கும் இடையிலான சண்டை உச்சத்தை அடைந்துள்ளது. அப்போது கணையாலால் மனைவியின் குடும்பத்தினர் பற்றி பேசியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இரும்பிலே இருதயம் முளைக்குதோ..! ரோபோவுடன் டேட்டிங் போகும் இளைஞர்.. சீனாவில் வினோதம்..

சம்பவ நாளில் கணையலால், மனைவி ரவீனா குடும்பத்தினர் குறித்து அதிகம் பேசியதால் மனைவி ரவீனா கோவம் அடைந்துள்ளார். தொடர்ந்து கணையலால் பேசிக் கொண்டே இருந்ததால், அவரை கட்டி பிடித்து, கணையலாலின் நாக்கை கடித்துள்ளார். கோபத்தில் ரவீனா கடித்ததில் கணையலாலில் நாக்கு துண்டானது. வலியால் கணையலால் அலறி துடித்துள்ளார். ரவீனாவும் கோவத்தில் அவ்வாறு செய்தாரே ஒழிய, நாக்கு துண்டானதில் ரவினாவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இவர்களின் வழக்கமான சண்டை தான் இது என்றிருந்த குடும்பத்தினர், கணையலாலின் அலறல் சப்தத்தால் ஏதோ அசம்பாவிதம் நடந்ததாக புரிந்து கொண்டனர். அங்கு வந்து பார்த்தபோது கணையலாலில் நாக்கு துண்டாகி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதற்குள் கணையலால் மனைவி ரவீனா, தனது தவறை உணர்ந்தார். குற்ற உணர்ச்சியில் சிக்கி தவித்த ரவீனா, ஒரு அறைக்குள் சென்று அரிவாளால் தன்னை தானே வெட்டி உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்தார். எனினும் உடனிருந்த குடும்பத்தினர் அவரை காப்பற்றினர்.

நாக்குத்துண்டான நிலையில் தவித்த கணையலாலை உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருமணம் நடந்த ஒன்றரை மாதத்திலேயே கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் கணவனின் நாக்கை மனைவி கடித்து துப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: 7 வயது பேரனை ரூ.200க்கு விற்ற பாட்டி.. காரணத்தை கேட்டதும் கலங்கிய போலீசார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share