முன்கூட்டியே மாரடைப்பை கண்டுபிடிக்கும் செயலி.. அசத்திய ஆந்திர சிறுவன்..
முன்கூட்டியே மாரடைப்பு கண்டுபிடிக்கும் AI செயலியை வடிவமைத்த 14 வயது சிறுவனுக்கு ஆந்திர முதலமைச்சர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் மணல்பூரை சேர்ந்த மகேஷ் என்பவரின் மகன் சித்தார்த். கடந்த 2010-ம் ஆண்டு அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் மகேஷ் குடிபெயர்ந்துள்ளார். இந்த நிலையில் 14 வயதான சித்தார்த் அறிவியல் நுட்பங்களில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார்.
இதனை அடுத்து அவர் மாரடைப்பை சில வினாடிகளிலேயே முன்கூட்டியே கண்டுபிடிக்கும் மொபைல் செயலியை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளார். அந்த வகையில், மாணவன் சித்தார்த் செயலியை கண்டுபிடித்து அமெரிக்காவில் உள்ள சில மருத்துவமனைகளில் சோதனை செய்து பார்த்தபோது மாரடைப்பை முன்கூட்டியே கண்டறியப்பட்டு CIRCADIAN AI சோதனையில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் தனது தாய் நாடான இந்தியா இந்த செயலி மூலம் பயனடைய விரும்பிய மகேஷ், குடும்பத்துடன் இந்தியா வந்துள்ளார். அப்போது மகேஷின் ஏற்பாட்டில், அவர் சொந்த மாநிலமான ஆந்திராவில் அரசு மருத்துவமனைகளில் இந்த செயலியை பயன்படுத்த முயற்சித்துள்ளார்.
இதையும் படிங்க: எகிறிய மின் கட்டணம்.. மூன்றாவது முறை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பலு.. பெண்ணுக்கு இழப்பீடு வழங்க TANGEDCO-க்கு உத்தரவு...
இந்த செயலி ஸ்மார்ட்போன் மூலம் இதயத்துடிப்பு ஒலிகளை பதிவு செய்து ஆரம்ப கட்ட இருதய நோய்களை துல்லியமாக கண்டறிந்தது. முதற்கட்டமாக சுமார் 700 நோயாளிகளுக்கு எந்த செயலி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.
தொடர்ச்சியாக இது குறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யகுமாருக்கு தகவல் தெரிவிக்கவே, இதனை மாநிலம் முழுவதும் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து தலைமைச் செயலகம் சென்ற மாணவர் சித்தார்த்தை அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆகியோரிடம் இந்த செயலியின் பயன்பாடு குறித்து விரிவான விளக்கம் அளித்தார்.
தொடர்ச்சியாக இந்த செயலியின் பயன்பாடு மாநிலம் முழுவதும் பயன்படுத்தப்படும் என்று உறுதியளித்த முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மாணவனுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் இது குறித்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவரது எக்ஸ் தளத்தில் சித்தார்த்தின் கண்டுபிடிப்பு மிகப்பெரிய சாதனை என்றும் அவர் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தின் மூலம் 96 சதவீதம் மாரடைப்பு துல்லியமாக கண்டறிய உதவுகிறது என்றும் பதிவிட்டுள்ளார்.
மேலும் ஓர் வராகல் மற்றும் ஏ ஆர் எம் போன்ற உலகின் முன்னணி நிறுவனங்களின் சான்றிதழை இந்த செயலை பெற்றுள்ளதாகவும், இதனை தயாரித்த சிறுவனின் அனைத்து முயற்சிக்கும் ஆந்திர மாநில அரசு முழு ஆதரவாளிக்கும் என தெரிவித்து வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ‘மொழி பிரச்சனை, டீலிமிட்டேஷன் நாட்டை வடக்கு-தெற்கு என பிளவுபடுத்தும்’.. மத்திய அரசுக்கு ஆர்எஸ்எஸ் எச்சரிக்கை..!