×
 

ட்ரம்ப் வரியால் பீதி..! 600 டன் ‘ஐ-போனை’ இந்தியாவிலிருந்து அமெரிக்கா கொண்டு செல்லும் ‘ஆப்பிள்’ நிறுவனம்..!

ட்ரம்ப் வரிவிதிப்பால் 600 டன் ‘ஐ-போனை’ இந்தியாவிலிருந்து அமெரிக்கா கொண்டு செல்கிறது ‘ஆப்பிள்’ நிறுவனம்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரிவிதிப்பால் பதறிப்போன ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உள்ள ஆப்பிள் மொபைல் போன் தொழிற்சாலையில் இருந்து ஏறக்குறைய 600 டன் அதாவது 15 லட்சம் மொபைல் போன்களை இந்தியாவிலிருந்து அமெரிக்காக்கு கார்கோ விமானம் மூலம் ஆப்பிள் கொண்டு செல்கிறது.

அதிபர் ட்ர்பின் பரஸ்வர வரிவிதிப்பால் சீனாவின் தயாரிப்பு தொழிற்சாலையில் இருந்து செல்போன்களை இறக்குமதி செய்தால் கடும் வரிவிதிப்பை ஆப்பிள் நிறுவனம் எதிர்கொள்ள நேரிடும். ஆதலால், இந்தியாவில் உள்ள தொழிற்சாலையில் இருந்து ஐபோன்களை ஆப்பிள் இறக்குமதி செய்கிறது. 

அமெரிக்காவில் ஐபோன்கள் விலை உயரும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். சீனாவில் இருந்ததான் உதரிபாகங்கள் வரும், ஆனால், தற்போது சீனா வர்த்தகம் ட்ரம்பின் வரியால் முடங்கிவிட்டதால், ஐபோன் விலை அமெரிக்காவில் உயரக்கூடும். சீனாவில் இருந்து இறக்குமதி செய்தால் 125 சதவீதம் வரிவிதிப்பை சந்திக்க நேரிடும் என்பதால், இந்தியாவில் இருந்து ஐபோன்களை இறக்குமதி செய்தால் 26 சதவீதம் மட்டுமே வரி செலுத்த வேண்டும். அதிலும் 90 நாட்களுக்கு வரிவிதிப்பை ட்ரம்ப் நிறுத்தியிருப்பதால் அந்த வரியும் கிடையாது என்பதால் இந்தியாவிலிருந்து ஐபோன்களை இறக்குகிறது ஆப்பிள் நிறுவனம்.

இதையும் படிங்க: அடங்கிப்போறவன்னு நினைச்சிட்டியா..? 50% கூடுதல் வரி... சீனாவை மிரட்டும் டிரம்ப்..!

இந்தியாவிலிருந்து 15 லட்சம் ஐபோன்களை கார்கோ விமானத்தில் அமெரிக்காவுக்கு கொண்டு செல்ல இந்திய அதிகாரிகளிடம் ஆப்பிள் நிறுவன் பேசி வருகிறது. வழக்கமாக சென்னையில் இருந்து கார்கோ விமானம் முறையான பரிசோதனை முடிந்து செல்ல 30 மணிநேரம் ஆகும், ஆனால், அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி 6 மணிநேரத்தில் விமானத்தை அனுப்ப பேச்சு நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் இருந்து ஐபோன்களை கொண்டு செல்ல 6 கார்கோ விமானங்களை ஆப்பிள் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. ஒவ்வொரு விமானத்திலும் 100 டன் மதிப்புள்ள ஐபோன்களை கொண்டு செல்ல முடியும். பேக்கிங் செய்யப்பட்ட ஒரு ஐபோன் எடை 350 கிராம் இருக்கும். 600 டன் செல்போன் எனும்போது 15 லட்சம் ஐபோன்கள் கொண்டு செல்லப்படுகிறது.

இது குறித்து ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் கேட்ட கேள்விக்கு விமானப் போக்குவரத்து துறை, ஆப்பிள் நிறுவனம் சரியாக பதில் அளிக்கவில்லை. 
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஐபோன் 16 ப்ரோ 54 சதவீத வரியுடன் 1,599 டாலர்(ரூ.1.37லட்சம்) ஆக உயர்ந்தது, தற்போது 125 சதவீத வரியால் ஐபோன் விலை 2300 டாலராக(ரூ.1.97 லட்சம்) அதிகரித்தது.

இதையும் படிங்க: ரஷ்யாவின் ஆக்ரோஷ தாக்குதல்… நிலைகுலைந்த உக்ரைன்... கண்டுகொள்ளாத டிரம்ப்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share