×
 

பஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவாக வீடியோ... அஸ்ஸாம் எம்.எல்.ஏ அதிரடி கைது!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவித்த அசாமில் எம்.எல்.ஏ ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, இந்த தாக்குதல் தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், அசாமில் எதிர்க்கட்சியாக விளங்கும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் எம்.எல்.ஏ அமினுல் இஸ்லாம், பிப்ரவரி 2019ஆம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதல் மற்றும் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் படுகொலை ஆகிய இரண்டும்  அரசாங்கத்தின் சதித்திட்டங்கள்  என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுக்குறுத்து அவர் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, அசாம் காவல்துறை அவர் மீது தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ததுடன், அவரை கைது செய்துள்ளது.

இதையும் படிங்க: பாலியல் புகாரில் கைதான கேரள ஆசிரியர்... புகாரளித்த மாணவி கணவனுடன் செய்த செயலால் அதிர்ச்சி!!

இதுகுறித்து அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசுகையில், பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாகிஸ்தானைப் பாதுகாக்க முயற்சிக்கும் எவர் மீதும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். சமூக ஊடகங்களில் எம்எல்ஏ அமினுல் இஸ்லாமின் அறிக்கை மற்றும் வீடியோக்கள், அவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, எனவே, அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு AIUDF தலைவர் மௌலானா பதருதீன் அஜ்மல், "இதுகுறித்து நாங்கள் தெளிவுபடுத்திவிட்டோம். இந்த மாதிரியான சூழ்நிலையில், நாங்கள் எப்போதும் அரசாங்கத்துடன் ஒற்றுமையாக நிற்கிறோம். பயங்கரவாதிகளுக்கு மதம் இல்லை, பயங்கரவாதத்தைப் பரப்புபவர்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள். அவர்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவதூறு செய்கிறார்கள். அமினுல் இஸ்லாத்தின் பேச்சு, எங்கள் கட்சியினுடையது அல்ல  என விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: இருக்க இடம் கொடுத்தா இப்படியா? நண்பரின் மனைவியிடம் செயின் பறிப்பு.. தங்க இடம் தந்தவருக்கு அதிர்ச்சி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share