×
 

இருக்க இடம் கொடுத்தா இப்படியா? நண்பரின் மனைவியிடம் செயின் பறிப்பு.. தங்க இடம் தந்தவருக்கு அதிர்ச்சி..!

சென்னை மதுரவாயல் அருகே தூங்கும் போது, நண்பரின் மனைவியினுடைய கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் பகுதியில்  வசித்து வருபவர் கணேஷ். (வயது 40). நேபாளத்தைச் சேர்ந்த கணேஷ், சென்னை மதுரவாயலில் மனைவியுடன் தங்கி உள்ளார். அதே பகுதியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.  

இருவரும் நன்றாக கருத்து ஒற்றுமையுடம் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கணேஷ் தனது நண்பரான நேபாளத்தை சேர்ந்த கேசப் புல் என்பவரை கடந்த ஏப்ரல் மூன்றாம் தேதி இரவு சந்தித்துள்ளார். ஹோட்டல் வேலையில்  சிரமப்பட்ட கேசப்புல்லை பார்த்ததும் இரக்கம் கொண்ட, இரவு உணவு வழங்கி தன்னுடமே இரவு தங்க சொல்லி கேட்டுள்ளார்.

கேசப்புல்லும் கணேஷ் உடன் ஒன்றாக அறையில் தங்கி இருந்துள்ளார். அடுத்த நாள் முன்னதாகவே எழுந்த கேசப்புல், சுற்றி முற்றி பார்த்துள்ளார். நண்பன் வீட்டில் திருடி அந்த பணத்தில் சுகமாக வாழலாம் என நினைத்துள்ளார் கேசப்புல். ஆனால் அவர் நினைத்த அளவிலான காஸ்ட்லி பொருள் எதுவும் அவர் கண்ணில் படவில்லை.

அப்போது தான் கணேஷின் மனைவி அணிந்திருந்த தங்க சங்கிலி கேசப்புல்லின் கண்ணில் பட்டுள்ளது. யாருக்கும் தெரியாமல் அந்த நகையை திருடிவிட்டால், கிடைக்க கூடிய பணத்தில் நிம்மதியாக வாழலாம் என நினைத்துளார் கேசப் புல். நண்பன் கணேஷும் நன்றாக தூங்கி கொண்டிருந்தார். அவரது மனைவியும் இன்னும் தூக்கத்தில் இருந்து எழவில்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்த எண்ணி உள்ளான் கேசப்புல். 

இதையும் படிங்க: அழுதுகொண்டே வீட்டிற்கு போன கும்பமேளா மோனாலிசா... குடும்பத்தினர் என்ன செய்தார்கள் தெரியுமா?

நைசாகா கணேசன் மனைவியின் பக்கத்தில் போய் அமர்ந்துள்ளான். மெதுவாக அவருடைய கழுத்தில் இருந்த செயினை கேசப் புல் பறிக்க முயன்றுள்ளார். அந்த நேரம் எதேச்சையாக கணேஷ் கண் விழித்துள்ளார். நண்பன் கேசப் புல், தனது மனைவி அருகில் அமர்ந்து என்ன செய்கிறான் என பார்த்துள்ளார். உண்ட வீட்டிற்கு இரண்டகம் விளைவிக்கும் விதமாக கேசப் புல் தனது மனைவி கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றதை பார்த்த கணேஷ் சத்தம் போட்டுள்ளார். 

இதில் அவரது மனைவியும் எழுந்தார். வசமாக மாட்டிக் கொண்டதை அறிந்த கேசப் புல் ஏதேதோ சாக்கு சொல்லி உள்ளார். ஆனால் கணேஷ் அவரை கையும் களவுமாக பிடித்ததால், பிரச்னை பூதகரமானது. மாட்டிக்கொண்டோம் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என நினைத்த கேசப் புல் அங்கிருந்து ஓடியுள்ளார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக மதுரவாயல் காவல் நிலையத்தில் கணேஷ் புகார் அளித்தார். 

கணேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்து, இது தொடர்பாக விசாரணை செய்த போலீசார், கேசப் புல்லி எண்ணை வைத்து அவர் இருக்கும் இடத்தை ட்ரேஸ் செய்தனர். அப்போது கேசப் புல்,  கொருக்குப்பேட்டை பகுதியில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து கொருக்குபேட்டையில் உள்ள ஹோட்டலில் பணிபுரிந்து கொண்டிருந்த கேசப் புல்லை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைத்தனர். நண்பன் வீட்டில் தங்கி இருந்து நண்பருக்கே துரோகம் செய்ய நினைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: நூலிழையில் தப்பித்தார் கும்பமேளா மோனலிசா... இயக்குநர் கைது... எந்த வழக்கில் தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share