×
 

கழிவுகளால் கலங்கும் பவானி.... சட்டவிரோத சாயப்பட்டறைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வழியாக ஓடும் பவானி ஆற்றில் சாயநீர் கலப்புவதால் தண்ணீர் குடிப்பதற்கு தரமற்றதாக மாறி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வழியாக செல்லும் பவானி ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு சிறுமுகை மூளையூர் வரை 17 குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. இந்த ஆறு கோவை மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் தான் ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலங்கும்பு பகுதியில் இருந்து சிறுமுகை வரையிலான பகுதி வரை கடந்த ஒரு மாதத்திற்கு மேல் ஆற்று நீர் நிறம் மாறி காட்சி அளித்துள்ளது. இதனை கண்டு அச்சமடைந்த மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.

தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக சிறுமுகை பகுதியில் இயங்கும் கைத்தறி நூலுக்கு சாயம் ஏற்றும் 30க்கும் மேற்பட்ட சிறு சாயப்பட்டறைகள் அப்பகுதியில் இயங்கி வருகின்றன. இந்த பட்டறைகளில் இருந்து கழிவுநீர் இந்த ஆற்றிலேயே வெளியேற்றப்படுகின்றது. இதனாலே காற்றின் நீர் மாசு படுவதற்கான முக்கிய காரணம் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது மட்டும் இன்றி குடிசைகளில் நடத்தி வரும் இந்த சாயப்பட்டறைகளில் இருந்து சாய நீரானது பொது சாக்கடைகளில் கலக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: பிரயாக்ராஜ் நதி நீர் குளிப்பதற்கு தகுதியற்றது..! மனித கழிவு கிருமிகள் அளவு அதிகரிப்பு என எச்சரிக்கை..!

மேலும் இந்த சாயப்பட்டறைகளில் கழிவு நீரை சுத்தம் செய்யாமல் நேரடியாக பொது சாக்கடைகளில் விட்டுள்ளதால் கழிவுநீர் ஆற்றில் கலந்து நீர் கருப்பு நிறமாக மாறியது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இந்த நீர் மொத்தமாக பவானி ஆற்றில் கலப்பதால் ஆற்று நீர் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நிறம் மாதிரி மாசடைந்து காணப்படுகின்றன.

இந்த தண்ணீரை ஜடையம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீராக வழங்கப்பட்டு வருவதால் இதனை பயன்படுத்தும் மக்களுக்கு பல்வேறு உடல் நல குறைபாடுகள் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள்கள் மற்றும் அதிகாரிகள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் அளித்த நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரிய துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். மேலும் சட்டவிரோதமாக செயல்பட்டு மூன்று சாயப்பட்டறைகளை உடனடியாக மூட உத்தரவு பிறப்பித்தனர்.

இதையும் படிங்க: காதலி உள்பட 6 பேரை கொலை செய்த கொடூரன்; திருமணம் செய்து வைக்க மறுத்ததால் நடந்த வெறிச் செயலா? உருக்கமான தகவல்கள்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share