×
 

டெல்லியில் உச்சகட்ட பதற்றம்..! பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்ட பாஜக..!

பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு திரும்ப பெறப்பட்ட நிலையில் பாஜகவினர் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு, பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

பாகிஸ்தான் தூதரகம் முன் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை டெல்லி காவல்துறை அகற்றிய நிலையில், தூதரகத்தை முற்றுகையிட்டு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தும் சூழல் நிலவியது.

இதையும் படிங்க: அடக்கொடுமையே... தாய்மொழியிலேயே இவ்வளவு தப்பா... பாஜக போராட்டத்தில் அதகளம்...!

இந்த நிலையில் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை பாரதிய ஜனதா கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி உள்ளனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது.

இதையும் படிங்க: பஹல்கம் தாக்குதல்... டெல்லி பாக்., தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்? அதிர்ச்சி வீடியோ..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share