பஹல்கம் தாக்குதல்... டெல்லி பாக்., தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்? அதிர்ச்சி வீடியோ..!
இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் கேக்குகள் ஆர்டர் செய்யப்படுகின்றன.
ஜம்மு காஷ்மீரின், பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு ராணுவம், காவல்துறையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். பல இராணுவக் குழுக்கள் முழுப் பகுதியிலும் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ராணுவத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உதம்பூரின் துட்டு-பசந்த்கர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் நடந்து வருவதாக ஜம்மு காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் ஒரு ராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். தேடுதல் நடவடிக்கையின் போது, பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதற்கு பதிலடியாக ராணுவத்தினரும் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். இங்கு இரண்டு, மூன்று பயங்கரவாதிகளை இராணுவம் சுற்றி வளைத்துள்ளதாக நம்பப்படுகிறது. இது சமீபத்தில் ராம்நகர் பகுதியில் கண்காணிக்கப்பட்ட அதே பயங்கரவாதக் குழுவாக இருக்கலாம். இந்த 3 பேரும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளாக இருக்கலாம்.
இந்த மோதலில், இரு தரப்பிலிருந்தும் துப்பாக்கிச் சூடு சத்தம் அவ்வப்போது கேட்டு வருகிறது. சம்பவ இடத்தில் பலத்த படை குவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், பல காவல்துறையினரும் இராணுவத்துடன் உள்ளனர். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்திய ராணுவம் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. இதனால்தான் கடந்த 24 மணி நேரத்தில் இராணுவத்தின் இரண்டாவது நடவடிக்கை இது. ராணுவ தகவலின்படி, தற்போது பள்ளத்தாக்கில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் தீவிரமாக உள்ளனர்.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல் எதிரொலி..! பிரதமர் தலைமையில் கூடியது அமைச்சரவை கூட்டம்..!
பஹல்காமில் 26 அப்பாடி பொதுமக்கள் தீவிரவாத தாக்குதலில் செத்து மடிய, இந்திய அரசு பாகிஸ்தானுக்கு பல தடைகளை விதித்து வருகிறது இது ஒருபுறமிருக்க, ஒருபுறமும் இப்படி நாடே பெரும் பதற்றத்தில் இருக்க, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு கேக்குடன் சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் இஸ்லாமிய இளைஞர் ஒருவ கேக்குடன் பாகிஸ்தான் தூதரகத்துக்கு செல்கிறார். அவரை மறித்து கேள்வி கேட்ட நிருபர்கள், எதற்காக இந்த கேக்? என்ன கொண்டாட்டம் எனக் கேட்டு மடக்க, அவர்களிடம் பதில் சொல்ல முடியாமல், அவர்களை கடந்து செல்கிறார் அந்த இஸ்லாமிய இளைஞர்.
இதற்கு பதிலடி கொடுத்து வரும் பலரும், ''இந்தியாவில் உள்ள அனைவரும் இதைப் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் கேக்குகள் ஆர்டர் செய்யப்படுகின்றன.
Is the Pakistani embassy in New Delhi celebrating the Pahalgam terror attack? #Cake pic.twitter.com/IUm8l2sxTU
— Cyber Huntss (@Cyber_Huntss) April 24, 2025
பயங்கரவாதிகளின் தாக்குதலை கொண்டாடுகிறார்கள். இந்திய அரசு பார்த்துக் கொண்டிருக்கிறதா..? இன்னும் சில கீழ்த்தரமான உயிரினங்கள் பயங்கரவாத அரசான பாகிஸ்தானைப் பாதுகாக்கின்றன'' என கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: டெல்லி வந்தடைந்தார் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ்.. பிரதமர் மோடியுடன் சந்திப்பு..!