கருணாநிதி மகள் எப்படி நாடாராக முடியும்..? ஒரு அப்பாவுக்கு இரண்டு சாதி இருக்குமா..? கனிமொழிக்கு சீமான் சம்மட்டி அடி..!
எத்தனையோ தொகுதிகள் தமிழ்நாட்டில் இருக்கும் போது தூத்துக்குடியில் நீங்கள் போய் போட்டியிட்டதற்கு காரணம் சொல்ல முடியுமா?
'ஜாதி' பார்த்து தூத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழி பெரியார் பற்றி பேசலாமா? என நாம் தமிழார் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
பெரியாரை பற்றி இழிவுபடுத்துபவர்கள் அரசியல் கூலிக்காரன் என கனிமொழி சீமானை கடுமையாக விமர்த்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள சீமான், ''கனிமொழி, அவரது தந்தை கருணாநிதியைத் தான் கூலிக்காரன் என்று சொல்கிறார்.அம்மையார் கனிமொழி அவர்கள் பெரியாரை எதிர்த்து சில கூலிகள் அரசியல் செய்வதாக கூறுகிறார். அம்மையார் கனிமொழி, கூலிக்காரர்கள் என்று சொல்வது கருணாநிதியையும், அந்த கட்சியின் தோற்றுநர் பேரறிஞர் அண்ணா அவர்களையும் தான் சொல்கிறார்.
ஏனென்றால் நான் பெரியாரை இழிவுபடுத்தவில்லை. பெரியார் என்ன பேசினார்? எழுதியிருந்தாரோ? அதை எடுத்து தான் பேசுகிறேன். பெரியாரைப் பற்றிய பேசுறார்களே இந்த பெருமக்கள் கனிமொழி அம்மையார் உட்பட. பெரியாரைப் பற்றி பேசுகிறீர்கள் சரி, பெரியார் என்ன பேசினார்? பெரியார் என்ன எழுதி வைத்தார்? என்று எடுத்துப் பேச உங்களுக்கு யாருக்கும் துணிவில்லை. பெரியார் யார் தெரியுமா? பெரியார் யார் தெரியுமா? என்று கேட்கிறீர்கள். தெரியவில்லை நீங்கள் சொல்லுங்கள் என்றால் சொல்ல மறுக்கிறீர்கள். பெரியாரை இந்த தமிழ்நாட்டில் திமுக அளவிற்கு அந்த கட்சியின் தலைவர் பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கருணாநிதி அவர்களை விட யாராவது இழிவாக பேசியிருக்கிறார்களா ?
இதையும் படிங்க: 'ஆடி வராரு கருப்பு ஓடி வராரு...' பக்தியில் காது கடித்த துர்க்கா ஸ்டாலின்… கடுப்பில் பல்லைக் கடித்த ஆ.ராசா..!
நீங்கள் சொல்கிற பெரிய கூலி அம்மையார் கனிமொழி அவர்களே நீங்கள் பேசுகிற பெரிய கூலி உங்கள் அப்பா. அப்படி என்றால் உங்க அப்பாவை தான் எதிர்த்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு பெரியாரிஸ்டா? கடவுள் மறுப்பாளாரா? அப்படி என்றால் உங்கள் மருமகன் உதயநிதி ஸ்டாலின் நெற்றியில் திருநீர் பூசினீர்களா இல்லையா? நீங்கள் ஒரு கடவுள் எதிர்ப்பாளர், மறுப்பாளர் என்பதை ஏற்க வேண்டுமா? சமூக நீதி, பெண் உரிமை... உங்கள் கட்சியில் பெண்களுக்கு கொடுத்த முன்னுரிமை குறித்து பேச முடியுமா? பெரியார் எங்கே சாதி மறுப்பு...? எத்தனையோ தொகுதிகள் தமிழ்நாட்டில் இருக்கும் போது தூத்துக்குடியில் நீங்கள் போய் போட்டியிட்டதற்கு காரணம் சொல்ல முடியுமா?
நீங்கள் சொல்கிறீர்களா அல்லது நான் சொல்லட்டுமா? காரணம் என்ன? சென்னையில் நின்று இருக்கலாம், கோயம்புத்தூரில் நின்று இருக்கலாம். ஈரோட்டில் நின்று இருக்கலாம், சேலத்தில் நின்று இருக்கலாம். வேலூரில் நின்று இருக்கலாம்... இதையெல்லாம் விட்டுவிட்டு எதற்காக தூத்துக்குடியில் போய் நிற்கிறீர்கள்? ஜாதியை ஒழித்தீர்களா? அங்கே ஏமாந்த மக்கள் இருக்கிறார்கள். பாவப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். சாதி... இன்னும் உங்களை அந்த மக்கள் தன் சாதிக்காரன் என்று நம்புகிறான். பார்த்தீர்களா அந்த அளவுக்கு பைத்தியக்காரத்தனமாக இந்த மக்களை நீங்கள் நம்ப வைத்து இருக்கிறீர்கள். தூத்துக்குடியில் ஏன் இரண்டு முறை போட்டியிட்டீர்கள்? அந்த பாவப்பட்ட மக்களை நான் உங்கள் சாதி ஆள் என நம்ப வைத்திருக்கிறீர்கள்.
கருணாநிதி மகள் எப்படி நாடாராக முடியும்? நாடார் என்றால் அழகிரி, மு.க.ஸ்டாலின், தமிழரசு எல்லோரும் நாடாராகத்தானே இருக்க வேண்டும். ஒரு அப்பாவுக்கு இரண்டு சாதி இருக்குமா? யாராவது சொல்லுங்கள். பிறகு எதற்காக தூத்துக்குடி போய் நின்றீர்கள்? நீங்கள் எல்லாம் பெரியார் பற்றி பேசிய பேசுவதற்கு தகுதி இல்லாதவர்கள். சும்மா கூலி... காலி..என்று கதற கூடாது. பெரிய கூலி உங்க அப்பா தான்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆளுநரை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம்.... அண்ணா யுனிவர்சிட்டி பிரச்சனையிலிருந்து காப்பாற்றிய ஆளுநர்...