PoK-வை கைப்பற்ற இந்தியா திட்டம்? அடுத்தக்கட்ட நடவடிக்கையால் பாக். அதிர்ச்சி!!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா மீட்பது தொடர்பான ஆலோசனைகள் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவிர்த்துவிட்டு ஆண்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, பாகிஸ்தானுடனனா சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
பாகிஸ்தானியர்கள், இந்தியாவை விட்டு 48 மணிநேரத்தில் வெளியேற கெடு விதிக்கப்பட்டது, வாகா, அட்டாரி எல்லைகள் மூடப்பட்டன, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. மேலும் சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு நீர் திறந்துவிடப்படுவது நிறுத்தப்பட்டது. சிந்து நீரை நிறுத்துவது போருக்கு சமமான நடவடிக்கை என பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா மீட்பது தொடர்பான ஆலோசனைகள் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்; பாதுகாப்பு படை வீரர்கள் எங்கே போனார்கள்? விளக்குகிறது மத்திய அரசு!!
கடந்த 2016 ஆம் ஆண்டு தீவிரவாத ஏவுதளங்களில் தரைவழி சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. புல்வாமாவுக்குப் பிறகு 2019 பாலகோட் வான்வழித் தாக்குதல் நடதப்பட்டது. இப்போது பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நேரடியாக பாகிஸ்தான் உள்ளே புகுந்து ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பாவின் (எல்இடி) பினாமி அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எஃப்) மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தலாம் என கூறப்படுகிறது.
பாகிஸ்தான் இந்தியா எல்லையில் உள்ள தீவிரவாத அமைப்புகள் மீது இந்திய எல்லையை தாண்டாமல் வான்வெளி தாக்குதல்களை விமானம் மூலம் நடத்த வாய்ப்புகள் உள்ளன. இதனிடையே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா மீட்குமா என்ற விவாதம் எழுந்துள்ளது. மத்திய அரசுக்கு இது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவுக்கு தான் விரும்பியதைச் செய்வதற்கான ஆயுதங்களும் திறனும் உள்ளது. மேலும் சிம்லா ஒப்பந்தத்தில் இருந்து விலகிச் செல்லும் பாகிஸ்தானின் முடிவு காரணமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைவதற்கும், அதை உரிமை கோருவதற்கும் இந்தியாவிற்கு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு விழுந்த பலத்த அடி - அதிரடி ஆக்ஷனில் இறங்கிய பிரதமர் மோடி